சென்னை 2026: சென்னையைச் சார்ந்த இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி – HCAS , (2026 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி) வளாகத்தில் நேற்று ஆசிரியர் தின கொண்டாட்டம்- 2026 முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழா- (Fresher’s Day ) மற்றும் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின கொண்டாட்டம் காலை பத்து மணியளவில் எம் ஜி ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பள்ளிக்கரணை மாவட்ட காவல் உதவி ஆணையர் திரு. எஸ். ஜான் விக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். HCAS இன் இயக்குநர் டாக்டர். சூசன் வர்கீஸ், இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இவருடன் கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர் கல்வித் துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக HCAS இன் முப்பது ஆண்டுகால பயணத்தை விவரிக்கும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அத்துடன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பாராட்டும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு விழாவும், HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள்- முதலாம் ஆண்டு மாணவகளுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் HCAS இன் துணை இயக்குநர் திரு. டேவிட் ரயன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
மாணவர்கள், தங்கள் படைப்பாற்றல் – தகவல் தொடர்பு திறன்- டிஜிட்டல் திறமைகள் – ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும் நோக்கத்தில் HCAS இன்ஃப்ளூயன்சர் எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்கள் வாயிலாக கல்லூரி.. சமூகத்துடன் தீவிரமாக ஈடுபடுவதற்கும், HCAS இன் துடிப்பான வளாக கலாச்சாரத்தை முன்னிறுத்துவதற்கும்… மாணவர்களை இன்ஃப்ளூயன்சர்களாக வலிமைப்படுத்துவது தான் இந்த பாடத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் உயர்கல்வி – மாணவர் திறமை- படைப்பாற்றல்- தலைமைத்துவம்- வளர்ந்து வரும் டிஜிட்டல் திறன்கள்- ஆகியவற்றின் மீது HCAS கொண்டுள்ள எல்லைகளற்ற ஈடுபாட்டை பிரதிபலிக்கின்றன.


More Stories
SRM School of Law Adds 35 New Faculty Members in a Major Push towards Internationalisation
SRM Institute of Science and Technology Organized International Conference on Human Capital Management
Rajalakshmi Engineering College Celebrates 25th Graduation Day; 1,968 Students Receive Degrees