November 16, 2026

ஸ்பிரிங்ஃபீல்டு பதின்ம மேல்நிலைப் பள்ளியின் மாபெரும் வாசிப்பு முயற்சி – வரலாறு படைக்கும் புதிய சாதனை படைத்துள்ளது

குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், சென்னை கே.கே.நகரில் அமைந்துள்ள ஸ்பிரிங்ஃபீல்டு பதின்ம மேல்நிலைப் பள்ளி, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனையை நோக்கமாகக் கொண்டு மாபெரும் வாசிப்பு நிகழ்வை சிறப்பாக நடத்தியது.

ஒரே நேரத்தில் அதிகமான பள்ளி மாணவர்கள் நாளிதழ் வாசித்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மொத்தம் 1,427 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 1,295 மாணவர்கள், 62 பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள், 70 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களில் 719 ஆண் மாணவர்களும், 576 பெண் மாணவிகளும் பங்கேற்று, ஒற்றுமை மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த வாசிப்பு நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. முதலில் மாணவர்கள் தமிழ் நாளிதழ்களை வாசித்தனர். பின்னர் ஆங்கில நூல்களை வாசித்து நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த சாதனை முயற்சியை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடுவரான திரு. அருண்குமார் நேரில் பார்வையிட்டு, விதிமுறைகளின்படி ஆய்வு செய்து மதிப்பீடு செய்தார்.

தனது 52-வது ஆண்டைக் கொண்டாடி வரும் ஸ்பிரிங்ஃபீல்டு பதின்ம மேல்நிலைப் பள்ளி, இம்முயற்சியின் மூலம் குழந்தைகள் அதிகப்படியான கைப்பேசி மற்றும் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டிலிருந்து விலகி, வாசிப்பின் இனிமையை மீண்டும் உணர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை வலியுறுத்தியது.

வாசிப்புப் பழக்கம் மாணவர்களின் சொற்களஞ்சியத்தை வளப்படுத்துவதோடு, பேச்சுத்திறன், மொழிப்புலமை, தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் பொது அறிவையும் மேம்படுத்தும் என்பதை பள்ளி நிர்வாகம் எடுத்துரைத்தது.

இந்நிகழ்ச்சிக்கு தினமலர் நாளிதழ் குழு நாளிதழ்களை வழங்கி சிறப்பான ஆதரவை அளித்தது. பெற்றோர், முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் மாணவர்களுடன் இணைந்து இந்த மாபெரும் வாசிப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த உதவினர்.

இந்நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் திருமதி ச. சுமதி, முதன்மை முதல்வர் திரு. வீ. சங்கர்லால், முதல்வர் திருமதி ச. சுதா ஆகியோரின் வழிகாட்டுதலிலும், ஸ்பிரிங்ஃபீல்டு பள்ளிக் குடும்பத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்புடனும் சிறப்பாக நடைபெற்றது.

இது வெறும் சாதனை முயற்சியாக மட்டுமல்லாமல், குழந்தைகளிடையே வாசிப்புப் பண்பாட்டை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை சமூகத்திற்கு எடுத்துரைக்கும் விழிப்புணர்வு இயக்கமாகவும் அமைந்தது.

இந்த நிகழ்வில் ஆசிரியை மணிமாலா,
பள்ளி முதல்வர் திருமதி. சுதா,
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் தீர்ப்பாளர் உயர்திரு. அருண்குமார்,
பள்ளித் தாளாளர் திருமதி. சுமதி,
பள்ளி முதன்மை முதல்வர் உயர்திரு. சங்கர்லால்,
துணை முதல்வர் திருமதி. உஷா,
பள்ளி ஒருங்கிணைப்பாளர் திருமதி. வித்யவாணி
மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் திருமதி. மணிமாலா,
பள்ளி முதல்வர் திருமதி. சுதா,
உள்ளிட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

About Author