உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரவையின் சார்பில் காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களுக்கு அமைதிப் பேரவையின் நிறுவனர் பூ செ செ நித்தியானந்தம் மற்றும் பொதுச் செயலாளர் காசிராஜன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
108 வது உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களுக்கு அமைதிப் பேரவையின் நிறுவனர் நித்தியானந்தம் பொதுச் செயலாளர் காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஏழை எளிய தாய்மார்களுக்கு இனிப்பு மற்றும் வெயில் காலங்களில் பெண்கள் உடுத்துவதற்கு ஏதுவாக பருத்தினால் நெய்யப்பட்ட சேலை வழங்கி மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த நித்தியானந்தம் அவர்கள் தெரிவித்ததாவது இவ்வுலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் பெண்கள் தான் காரணம் பெண்கள் இல்லையென்றால் இவ்வுலகம் இல்லை பெண்களே இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை ஆண்களுக்கு பெண்களும் சமமானவர் கடந்த காலத்தை விட தற்போதைய நடைமுறையில் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்மாதிரியாக விளங்குவதாகவும் கல்வித் தரத்திலும் சரி நாட்டை பாதுகாக்க ராணுவத்திற்கும் வானூர்தி இயக்குவதற்கும் தொடர்வண்டி இயக்குவதற்கும் பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குகின்றனர் குறிப்பாக இந்திய தேசத்தின் குடியரசுத் தலைவராக திரோபதி முர்மூ ஒரு பெண் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஒரு பெண் டெல்லி தலைநகர் முதலமைச்சராக ஒரு பெண் போன்ற அனைத்து பொறுப்புகளிலும் அனைத்து துறைகளிலும் பெண்கள் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மை இவ்வுலகத்திற்கு அடையாளம் காட்டியவர் ஒரு பெண் ஆனால் தந்தை பெயர் மட்டும் இனிசியலாக வைப்பது ஏற்புடையதல்ல இனி நாம் தாய் தந்தை இருவர் பெயருமே இனிசியலாக வைக்க முன்வர வேண்டும் இதை குறித்து மத்திய மாநில அரசுக்கு அமைதிப் பேரவையின் சார்பில் கடிதங்கள் எழுதி உள்ளதாகவும் தொடர்ந்து இது குறித்து தமிழக முதலமைச்சரிடம் நேரில் சென்று மனு வழங்க உள்ளதாகவும் விரைவில் இது குறித்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்காக எடுத்துச் சென்று தாய் தந்தை பெயர் இனிசியலாக பதிவு அவசியம் சான்றிதழ் மட்டுமல்ல ஆதார் கார்டு ரேஷன் கார்டு அனைத்திலும் தாய் தந்தையர் பெயர் வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தாய்மார்களுக்கு பருத்தியால் நெய்யப்பட்ட சேலைகள் அமைதிப் பேரவையின் பொதுச் செயலாளர் காசிராஜன் அவர்களுடைய சொந்த செலவில் வழங்கினார் மேலும் இந்த உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai