சென்னை, ஏப்ரல் 15, 2025: இந்தியாவிலே வக்ஃபு சொத்துகளின் மேலாண்மை மற்றும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்திய குடியரசுத் தலைவர் வக்ஃபு (திருத்த) சட்ட மசோதா 2025-க்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியதை தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ‘அமீருல் மில்லத்’ எஸ். ஷேக் தாவூத் வரவேற்கிறார். இந்த வரலாற்றுப் புதிய சட்டம் வக்ஃபு சொத்துக்கள் தவறாக நிர்வகிக்கப்படும், ஆக்கிரமிக்கப்படும் மற்றும் சட்டரீதியான சர்ச்சைகளில் சிக்கியுள்ள இடங்களில் வக்ஃபு வாரிய (திருத்த) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசையும் மாநில அரசையும் தமிழ் மாநில முஸ்லிம் லீக்வலியுறுத்துகிறது.
தமிழ் மாநில முஸ்லிம் லீக், ‘உம்மத்துக்கான வக்ஃபு” எனும் மாநில அளவிலான இயக்கத்தை தொடங்கியுள்ளது. இது சமூகத்தில் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், செயல்முறைகளை கண்காணிக்கும். மேலும் வக்ஃப் வருவாய் மக்களின் வாழ்க்கையை மாற்றுவதை உறுதி செய்யும்.
தமிழ்நாட்டில் வக்ஃபு சொத்துகளின் நிலைமை:
தமிழ்நாட்டில், பல உயர் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் சட்டரீதியான சர்ச்சைகளில் சிக்கியுள்ளன, பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்தாக இருந்தும் தனியார் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக விற்கப்பட்டதாக கூறப்படுகிறது, சில, தனியார் நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளாக உள்ளன.
முறையான அளவீடுகள் இல்லாதது, அரசியல் மற்றும் தனிப்பட்ட தொடர்புகள், தாமதமான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பலவீனமான அமலாக்கம் காரணமாக இதுபோன்ற வக்ஃபுசொத்துக்கள் இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளன.
வக்ஃபு திருத்தப்பட்ட சட்டதை மாநில அரசு மறுக்க முடியாது
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் இவை அரசியல் வெளிப்பாடுகளாகவும் சட்டசபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ‘கருத்துக்களாக’ மட்டுமே இருக்க முடியும். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அவை தடுக்க முடியாது. எதிர்க்கட்சிகளின் நோக்கம் மத்திய அரசின் கொள்கைகளை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும், தேர்தல் நன்மைகளை பராமரிக்க வாக்காளர்களை தவறாக வழிநடத்துவதும் ஆகும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வேண்டுகோள்:
தமிழ் மாநில முஸ்லிம் லீக், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வக்ஃபு சொத்து உரிமைகளை சட்டவிரோத உரிமைகளிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்பு நிலங்களையும் விரிவான டிஜிட்டல் அளவீடு செய்யுமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளை வலியுறுத்துகிறது.
இதன்மூலம் பாரம்பரிய வக்ஃபு சொத்துக்களை, தனிநபர்களின் சட்டவிரோத உரிமை மற்றும் ஆகிரமிப்பிலிருந்து பாதுகாக்கலாம். மேலும் வக்ஃபு சொத்துக்கள் மத, தொண்டு மற்றும் சமூக நல காரணங்களுக்காக திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
More Stories
Iswarya Hospital, Chennai Successfully Removed 6 cm Tumor from Heart of a 63-Year-Old Man
விளையாட்டுத் திறமைகளை கொண்ட மாணவர்களையும் உடற்தகுதி ஆசிரியர்களையும் வெலம்மாள் நெக்சஸ் பாராட்டுகிறது
தமிழ்நாடு ஆதி ஆந்திரா அருந்ததியர் மகாசபா துணை தலைவர் ஊட்டுகூரி தேவதானம் அவர்களின் பிறந்தநாள் விழா