சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சேவை கழகத்தின் சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவர் வி எம் ஜோதிராஜ் அவர்கள் தலைமையில் சென்னை கோடம்பாக்கம் பவர் அவுஸ்சில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் ஜோதி ராஜ் அவர்கள் உலகம் பாராட்டக்கூடிய தலைவர் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உலகத்திற்கு எடுத்துக்காட்டாக சட்ட முன் வடவை அமைத்து அனைவரும் பாராட்டக்கூடிய வகையில் சிறந்த சட்டதிட்டங்களை கொண்டு வந்த பெருமை டாக்டர் அம்பேத்கர் அவர்களை சாரும் என புகழாரம் சூட்டினார்.

மேலும் அதைத் தொடர்ந்து சென்னை முன்னாள் மேயரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான திரு சைதை துரைசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார் மேலும் இந்த நிகழ்வில் . மக்கள் சேவை கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பா விஜயகுமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య