பெண் கல்வி மேம்படுத்தப்பட்டால் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் பாபா சாகிப் டாக்டர் பீ.ஆர்அம்பேத்கர் கூற்றுக்கு ஏற்ப நாங்கள் செயல்படுகிறோம் என அம்பேத்கர் கல்வி இயக்கம் தமிழ் நாடு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் நிறுவனத் தலைவருமான முனைவர் மு மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கல்வி இயக்கம் கரூர் திண்டுக்கல் திருச்சி தேனி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 45க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு பாடசாலை நடத்தி வருகிறது. இதில் முதுநிலை பட்டதாரி ஆசிரியை ஆசிரியைகள் பாடங்களை போதிக்கிறார்கள். அவர்களுக்கு அரசு பணி சார்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வாயிலாக மாதந்தோறும் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் ஊக்க தொகை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அம்பேத்கர் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் நிறுவனத் தலைவருமான முனைவர் மு மாரியப்பன் கல்வி புரட்சி செய்,ஒன்று சேர் என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் எந்த லாப நோக்கம் இன்றி சமூகத்திற்கு திரும்ப செய்வோம் என்ற அவரின் நோக்கத்துக்கு ஏற்ப நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம் அவரின் அறிவுக் கூர்மையை பயன்படுத்தி இன மக்களை கல்வியில் முன்னேற வைத்து நற்சிந்தனைகளுடன் வீர நடை போட வேண்டும் என்பதற்காகவும் அவர்களை எல்லா நற்பண்புகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காகவும் உயர்கல்வி பயின்று வேலை இல்லாமல் இருக்கும் நம் இனப்பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் கிராமங்கள் தோறும் இரவு பாடசாலையை 2024 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறோம் என்றார் நான் சமூக சேவை மனப்பான்மையோடு தனிப்பட்ட முறையில் உயர்கல்வி பயிலும் பார்வையற்ற சகோதர சகோதரிகளுக்கு தேர்வு எழுத உதவியாளராக பணி செய்கிறேன் என்றும் எனக்குத் தெரிந்த சிலரின் மூலம் மாவட்டம் தோறும் இப்பணியை விரிவு படுத்தியுள்ளேன். ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் இரவு பாடசாலை இன்று 43 ஆக வளர்ச்சி அடைந்திருக்கிறது கல்வி சமத்துவதற்கான ஆயுதம் கல்வி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது என்ற அம்பேத்கரின் கொள்கைக்கு ஏற்ப சமத்துவ கல்வி சமூக கல்வி ஆகியவற்றை நாங்கள் கற்பிக்கிறோம் மேலும் நற்சிந்தனைகளோடு அவர்களை மேம்படுத்துகிறோம் அவர்கள் மூடநம்பிக்கை இருந்து விடுபட வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் பெண் கல்வி மேம்படுத்தப்பட்டால் மட்டுமே சமூக மாற்றம் ஏற்படும் அவர்களால் இந்த உலகத்தை ஆள முடியும் என்ற அம்பேத்கரின் கூற்றுக்கு ஏற்ப தான் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் மேலும் தமிழக அரசு இல்லம் தோறும் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அதனை நாங்கள் வரவேற்கிறோம். எங்களது கல்வி சமத்துவ கல்வி மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் ஒரு அமைப்பு திட்டம் அதனை நாங்கள் மேலும் விரிவுபடுத்தி மாணவர்களின் நலன் காக்க எப்போதும் பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?