காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உள்துறை அமைச்சரும் மக்கள் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சியின் துணை தலைவருமான கக்கன் ஜி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பெருநகர சென்னை மாநகராட்சி 109-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவரும் 109வது வார்டு மாமன்ற உறுப்பினருமான திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூத்த உயர் அதிகாரி வி ஜி ராமசாமி மற்றும் பத்திரிக்கையாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய 109-வது மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் தெரிவித்ததாவது நாடு போற்றும் தலைவர் கக்கன் ஜி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மற்றும் அஞ்சுகம் பள்ளி குழந்தைகளுக்கு பேக் மற்றும் புத்தகம் ஜாமென்ட்ரி பாக்ஸ் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் 150 க்கு மேற்பட்ட மாணவ மாணவி செல்வங்களுக்கு திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது எப்போதும் தலைவர்கள் பிறந்தநாளில் பள்ளி குழந்தைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் இன்று அரசியல் வரலாற்றில் மாபெரும் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய பெருமை திரு கக்கன் ஜி அவர்களை சாரும் அதுமட்டுமல்ல முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் பாராட்டு பெற்றவர் மிக எளிமையான மனிதர் அவரை நாம் எப்போதும் போற்றி புகழ வேண்டுமென தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர் கராத்தே செல்வம் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்வில் அஞ்சுகம் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சென்னை பெருநகர் மாநகராட்சி அதிகாரிகள் பகுதி மக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?