மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட்காம் நிறுவனத்தின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு முன்னேறு தமிழா பாடல் வெளியீட்டு விழா, சாருகேசி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்களின் பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது…
மேலும் இந்தியன் ஃபேமிலி கிளப் மற்றும் சாரிடபிள் டிரஸ்ட் உடன் இணைந்து 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா சாதனையாளர்கள் விருதுகள் வழங்கும் விழா சென்னை மதுரவாயிலில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது…
மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில், வி ஐ டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஸ்வநாதன், மதுரவாயில் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி, திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான நடிகர் பார்த்திபன் , திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,பெயரா அமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான முன்னேறு தமிழா விருதுகளை வழங்கி கௌரவித்தனர்…
முன்னதாக மெட்ராஸ் சினி ப்ரொடெக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் நடிக்கும் சாருகேசி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது..
இதில் திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா , தயாரிப்பாளர் அருண் உள்ளிட்ட சாருகேசி திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாருகேசி திரைப்படம் குறித்தான சுவாரஸ்யமான கருத்துக்களை எடுத்துரைத்தனர்…
மேலும் இந்த விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையில், மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஜெயச்சந்திரன் எழுதிய முன்னேறு தமிழா எனும் பாடல் வெளியிடப்பட்டது…
இதில் திரைப்பட கலைஞர்கள், மெட்ராஸ் சிட்டி ப்ராபர்டீஸ் டாட் காம் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள், பல்வேறு அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்…


More Stories
IMA Tambaram’s 3-Day ‘Namma Health Mega Expo 2026’ Kicks Off Today, Offering Free Health Screenings Across Multiple Specialities
Indian bank Financial Results for the Quarter ended 30th September 2026
Tamil Nadu shoppers drive 100% growth in everyday essentials during Amazon Great Indian Festival