தமிழ்நாடு பிராமண சங்கத்தின் வட சென்னை பெரம்பூர் கிளையின் 43 ஆம் ஆண்டின் ஆண்டு விழா சென்னை பெரம்பூர் ரங்க ராஜலட்சுமி ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் சந்திரமௌலி தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஸ்ரீமதி சுந்தரி ரங்கநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார் தொடர்ந்து வடசென்னை மாவட்ட தலைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி மாவட்ட பொருளாளர் ராமசாமி மத்திய சென்னை மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மாநில துணைப் பொதுச் செயலாளர் ராமநாதன் மாநில பொருளாளர் பருத்திப்பட்டு நரசிம்மன் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருவான்மியூர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ என். நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள் இதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ என் நாராயணன் மற்றும் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீமதி சுந்தரி ரங்கநாதன் தெரிவித்ததாவது பிராமணர் சங்கம் துவங்கப்பட்டு சுமார் 45 ஆண்டு காலம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் இன்று வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மருத்துவ உதவித்தொகை அதேபோன்று ஒரு குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான உதவி செய்து வருவதாகவும் பிராமணர் சங்கம் என்பது ஜாதியின் பெயர் அல்ல எங்களுடைய முக்கிய நோக்கம் கற்றல் கற்பித்தல் மற்றவர்களுக்கு சேவை செய்தல் என்ற உன்னத நோக்கத்துடன் ஜாதி மதம் மொழி பாராமல் கல்வியில் பின்தங்கி உள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் அதேபோன்று அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள மாணவ மாணவிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் மேலும் முதியோர்களுக்கு பிராமணர் சங்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தி வருவதாகவும் முதியோர் இல்லம் இருக்கக் கூடாது என்பதே எங்களுடைய நோக்கம் அதனை அனைவரும் உணர்ந்து அவர்களுடைய பிள்ளைகள் அவர்கள் இல்லத்தில் முதியோர்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் என தெரிவித்தனர் மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் ஜே சந்திரமௌலி துணைத் தலைவர் ஜி சுந்தரேசன் சமாஜ செயலாளர் பி ஜெயக்குமார் பொருளாளர் வி ராமசாமி ஆலோசகர் சுந்தரி ரங்கநாதன் அமைப்பு செயலாளர் இ பி சுப்பிரமணியன் மகளிர் அணி செயலாளர் பாரதி ராஜகோபால் மகளிர் அணி இணை செயலாளர் பி என் பத்ம யோசனா இளைஞர் அணி செயலாளர் கே சாமிநாத சிவவாச்சாரியார் இளைஞர் அணி இணை செயலாளர் கே ராமச்சந்திரன் சிவாச்சாரியார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் எஸ் குருமூர்த்தி எஸ் ராஜகோபால் மீனாட்ஷி ராமசாமி மங்களம் சீனிவாசன் உள்ளிட்ட தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாவட்ட வட்ட உறுப்பினர்கள் மற்றும் அன்னதான சமாஜம் தலைமை ஆசிரியர் மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் என 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య