சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரில் ஜூலை 15ஆம் தேதி கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு 109வது மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் அன்னதானம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அருள்பெத்தையா அவர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சிவராஜ் சேகர் பகுதி தலைவர் கராத்தே செல்வம் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 500 மாணவர்களுக்கு பள்ளிக்கு செல்லும் புத்தகம் பை மற்றும் ஓவியத்திற்கு தேவையான பொருட்கள் (colour paint box) வழங்கப்பட்டது.
மேலும் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஓவிய போட்டி பேச்சு போட்டி வைக்கப்பட்டது, இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య