சென்னை தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் தேசிய ஸ்தாபன காங்கிரஸின் தேசிய பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் தேசபக்தர் T.V.நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா, மற்றும் தேசிய ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் நினைவேந்தல், தேச நலன் சார்ந்த தீர்மானங்கள் இயற்றுவதற்காக இந்த பொதுக்குழ கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தனர்.
அப்போது பொதுச் செயலாளர் தேசபக்தர் T.V. நரசிம்மன் அவர்களுக்கு நூல்நூக்கும் ராட்டை
நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது
பின்னர் தொடர்ந்து இந்த பொதுக்குழுவில் 9 தீர்மானங்கள் நிறை
வேற்றப்பட்டது.
மேலும் 16 வயது நிரம்பிய இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் கட்டாயம் ஒரு வருடம் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும். இதனை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், இதனால் தேசபக்தியும், ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தப்படும் ஆகையால் மத்திய அரசு இதனை உடனே அறிவிக்க வேண்டுமென தெரிவித்தனர்.
மேலும் அறநிலைத் துறை மூலம் வருகின்ற வருவாயை இந்து கோயில்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். அதேபோல் வேறுமதத்தை சார்ந்தவர்கள் இந்து கோயில்களில் பணி புரிந்தால் வேறு பணியிடங்களுக்குமாற்றம் செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை. விடுத்தனர்
தமிழகத்தில் ஓடும் அனைத்து நதிகளை
ஒருங்கிணைத்து முப்போகம் பயிர் செய்ய தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அரசு பள்ளி நிர்ணயித்த கட்டணத்தையே தனியார் பள்ளிகளும் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
ஹரிஜன நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் தமிழக மாவட்ட தலைநகரங்களில் அரசு கலைக் கல்லூரிகளில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் பெயர் ஏற்படுத்த வேண்டும்.
தாது மணல் குவாரிகள் ஏல தொகை கணிசமாக உயர்த்திஅரசுக்கு கூடுதல் வருவாய்க்கு வழிவகை செய்ய வேண்டும்,
சமூக நீதி என்று பேச்சளவில் இல்லாமல் செயல்பாட்டில் காட்ட வேண்டும் பொதுசிவில் சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தர மாநில அரசை தேசியஸ்தாபன காங்கிரஸ் கேட்டு கொள்கிறது என தெரிவித்தார் இந்த நிகழ்வில் அகில இந்திய அமைப்புச் செயலாளர். தேசிபக்தர் சாஜாகுணா, தேசிய செயலாளர் C. S. கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?