தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா நகரில் 12வது உலக ஸ்டெர்ன்த் லிப்டிங் போட்டி ஜூலை மாதம்16 முதல்19 வரை நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியாவின் சார்பாக தமிழ்நாடு மாநிலத்தின் பின்வரும் வீர, வீராங்கனைகள் 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்
இதில் செல்வராஜ் (S.L) மாஸ்டர் 2 வெள்ளி பதக்கம்,
2, R.யுவராஜ் மாஸ்டர்:1(IBP&S. L) தங்கப்பதக்கம் :2
3,Y.தென்னரசி மாஸ்டர்I:1( S.L&IBP:) தங்கப்பதக்கம் :2
4, சண்முகராஜா சீனியர்:(S.L) தங்கப்பதக்கம் :1
5, பிரீதி சிவா பிச்சம்: ஜூனியர்(S.L&IBP) தங்கம்,சீனியர்( S.L) வெங்கலம் IBP: தங்கப்பதக்கம்
6,ராகவா ஆனந்தம் மாஸ்டர்:2(S.L&IBP) தங்கப்பதக்கம் 7,S. ராதா மாஸ்டர்:2:(S L&IBP) வெண்கலபதக்கம் :
8,S.தர்னிஷ் (SUBJUNIOR .JR S.L)தங்கம். சீனியர்:வெள்ளி பதக்கம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வீர, வீராங்கனைகளும் போட்டியில் பங்குபெற்று தங்கம்:12,வெள்ளி:2,வெண்கலம்:3 என மொத்தம்17 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
மேலும் 40 வயதிற்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் பிரிவில் R. யுவராஜா வலிமையான மனிதன் பட்டத்தை வென்றார். இவர் தொடர்ந்து 4வது முறையாக இப் பட்டத்தை வெல்வது குறிப்பிடத்தக்கது. நம் தாய் திரு நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களுக்கு தமிழ்நாடு ஸ்ட்ரென்த் லிப்டிங் சங்கத்தின் தலைவர் திருமதி.சுமதி அன்பரசு, செயலாளர் எஸ். ஜெயராமன், சி. செல்வராஜ், டெக்னிக்கல் கமிட்டி வி.கே.பவர் பழனி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தி.நகர் ஸ்ரீ மாங்கி சந்த் பண்டாரி ஜெயின் மேல்
நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும்S.தர்னிஷ்(SUB-JUNIOR.JRS.L ) தங்கப்பதக்கம் வென்றதுக்காக பள்ளியின் சார்பில் தாளாளர் பிரதீப் கோர்டியா,பள்ளியின்செயலாளர் பியூஸ்பண்டார தலைமை ஆசிரியை B.சப்தகிரி ஆகியோர் இப்பள்ளி மாணவருடன் பதக்கம் பெற்ற அனைவரையும் அழைத்து சிறப்பு செய்து கௌரவித்தனர்
..


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?