தமிழ்நாடு பிராமணர் சங்கம் அசோக் நகர் கிளை மத்திய சென்னை மாவட்டம் சார்பில் உலக ஷேமத்திற்காக 108 சுவாசினி பூஜை தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில செயலாளரும் அசோக் நகர் கிளை தலைவருமான பிராமண சேவா விபுஷன் ஸ்ரீமதி டாக்டர் லலிதா சுகுமார் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது .
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு கிளை பொதுச் செயலாளர் பிராமண சேவா பூஷன் ஸ்ரீமதி உஷா ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து மத்திய சென்னை மாவட்ட தலைவர் பிராமண சேவா பூசன் ஸ்ரீ சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக சாய் சங்கரா மேட்ரிமோனியல் சென்னை . முனைவர் என் பஞ்சாபகேசன் மற்றும் சங்கரா டிவி புகழ் ஜோதிடர் அருளமுதம் பார்த்தசாரதி குருஜி கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
மேலும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் சேவா ரத்னா திருவெற்றியூர் ஸ்ரீ என் நாராயணன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அவர் கூறியது உலக ஷேமத்திற்காக 108 சுவாசினி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது என்றும் பிராமணர் சங்கம் என்பது யாருக்கும் எதிரானவர்கள் அல்ல அனைவரும் அனைத்து நலன்களையும் பெற வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் மேலும் இவ்வுலகில் வாழும் அனைத்து மனிதர்களும் ஒன்றுதான் அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் இந்த 108 சுவாசினி பூஜை என்பது உலக நன்மைக்காக பிரத்தியக பூஜை அனைவரும் நலம் பெற வேண்டும் இந்து தர்மத்தையும் இந்து பாரம்பரியத்தையும் நாம் தொடர்ந்து நம்முடைய சந்ததியர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் பிராமணர்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் எப்போதும் முன்னோடியாக திகழ்ந்தவர்கள் அதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்து வழிநடத்திய அசோக் நகர் கிளை தலைவர் ஸ்ரீமதி டாக்டர் லலிதா சுகுமார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறினார் மேலும் இந்த நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் பத்மா வெங்கட்ராமன் கணபதி லட்சுமி பாலாஜி சுகந்தி கல்யாணி உள்ளிட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு ஏற்பாட்டினை அசோக் நகர் கிளை தலைவர் ஸ்ரீமதி டாக்டர் லலிதா சுகுமார் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ததற்கு சங்கத்தின் சார்பில் அனைவரும் நன்றியையும் பாராட்டும் தெரிவித்தனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?