04 08 2025 அன்று பிறந்தநாள் காணும் தமிழக பாஜக மாநில செயலாளரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான திருமதி பிரமிளா சம்பத் அவர்களின் பிறந்த நாள் விழா சென்னை மாம்பலத்தில் உள்ள ஷோபனா திருமண மண்டபத்தில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் மிக சிறப்பாக பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவன் ஜி மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் மாநிலத் துணைத் தலைவர் வி பி துரைசாமி தென் சென்னை மாவட்ட தலைவர் சஞ்சீவி முன்னாள் தென் சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு திருமதி பிரமிளா சம்பத் அவர்களுக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள் அதனை தொடர்ந்து பேசிய தலைவர்கள் கூறியது திருமதி பிரமிளா சம்பத் அவர்கள் மனிதநேயம் கொண்டவர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராகவும் அவருடைய அரசியல் பயணம் செயல்பட்டு வருவதாகவும் கொரோனா காலகட்டத்தில் அவர் ஆற்றிய பணி கணக்கில் அடங்காது அதுமட்டுமல்ல அரசியல் பணி எந்த பணியாக இருந்தாலும் கொடுத்த நேரத்தை தவறாமல் பின்பற்றக்கூடிய நேர்மைக்கும் எளிமைக்கும் சொந்தக்காரர் திருமதி பிரமிளா சம்பத் அவர்கள் சிறந்த பெண்மணியாக அவர் விளங்குகிறார் அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் இந்த சமூகத்திற்கு அவருடைய பணி மிக சிறப்பான பணியாக அமையும் என மனதார அவரை வாழ்த்தி மகிழ்வதில் பெருமை கொள்கிறோம் என தெரிவித்தனர்.
மேலும் திருமதி பிரமிளா சம்பத் அவர்களின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட துணை தலைவர் நாச்சிகுளம் சரவணன் தென்சென்னை மாவட்ட செயலாளர் உமாசங்கர் தியாகராய நகர் கிழக்கு மண்டல் தலைவர் கார்த்திக் மூர்த்தி தியாகராய நகர் மேற்கு மண்டல் தலைவர் கதிரவன் பாஜக மாநில சிந்தனையாளர் பிரிவின் மாநில செயலாளர் டாக்டர் ப்ரீத்தி சாய் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் கண்மணி சீனிவாசன் பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில செயலாளர் டாக்டர் தாரணி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு திருமதி பிரமிளா சம்பத் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?