சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ கீதா பவன் ட்ரெஸ்டின் 35 வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மாஷ்டமி விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது 16.8.25 மாலை ஆறு மணிக்கு ஸ்ரீமதி& ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள் பசுபூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கிருஷ்ணாவதார கண்காட்சியினை தமிழ்நாடு காவல்துறை பொருளாதார குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்தோஷ் குமார் ஐபிஎஸ் அவர்கள் இதனை தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, சான்றிதழ், மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைவர் ஓம்பிரகாஷ் மோடி, நிர்வாக அறங்காவலர் மனு கோயல்,
ஸ்ரீ கீதா பவன் அறங்காவலர்கள் ஸ்ரீ சிவகுமார் கோயங்கோ ஜி, ஸ்ரீ மனோகர் லால் பக்காரியா ஜி, ஸ்ரீ கே கே குப்தா ஜி, ஸ்ரீ ராகேஷ் கோயல் ஜி,பொருளாளர் முரளி லால் சந்தோலே இந் நிகழ்விற்கு அறங்காவலர் ஸ்ரீ சிவகுமார் போயங்கோ நன்றி உரை வழங்கினார் .
அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சஞ்சு& மோனு போதாரின் பக்தி பாடல்கள், பஜனை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது, பின்னர் நள்ளிரவு கொல்கத்தாவை சேர்ந்த ஆர்த்தி, பூஜா &பிரசாந்த் கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
17 ந்தேதி காலை10 மணிக்கு சஞ்சு&மோனு போத்தாரின்” நந்த் கே ஆனந்த பயோ ” பகவான் கிருஷ்ணா பஜன அபிஷேகமும், மதியம் ஒரு மணிக்கு கொல்கத்தாவை சேர்ந்த கலைஞர்கள் ஆர்த்தி பிரசாத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக கிருஷ்ணர் வாழ்க்கை குறித்த கண்காட்சி இரவு 10 மணி வரை நடைபெறும்.
மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக 18ம் தேதி கிருஷ்ணரின் சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்
இந்த அறக்கட்டளை 1971ஆண்டு தொலைநோக்குடன்நிறுவனர்களான ஸ்ரீ உகர் சென்கோயல் ஜி, ஸ்ரீ ஹரி கோபால் ஜி, ஸ்ரீ அசோக்குமார் கோயல் ஜி அவர்களால் துவக்கப்பட்டு மாற்று திறனாளிக்கான நலத்திட்டங்கள், தகுதி உள்ள மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி நோய் வாய்ப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ உதவி, மாற்று திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர்களுக்கு இலவச திருமணங்கள், நடத்தி வைப்பது சிறப்பு மருத்துவ முகாம்கள், பள்ளிகளுக்கு தேவையான உட்கடமைப்புகள், பெண்கள் விடுதி மற்றும் கழிப்பறைகள் கட்டுதல்,அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் யோகா சமஸ்கிருதம் பகவத் கீதை வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுவதாக தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் கீதா பவன் டிரஸ்ட் நிர்வாகிகள் ஊழியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மாணவர்கள் பெற்றோர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య