சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில் முன்பு மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொத்து அபகரிப்பு விவகாரம்
தொடர்பாக கணவர் போனி கபூர் தொடர்ந்த வழக்கின் எதிர் மனுதாரர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளார்.
கடந்த, 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என்று கூறி வருவதாகவும் முதல் மனைவி உயிரோடு இருந்த போது, தன்னை திருமணம் செய்து கொண்டதாக, சந்திரசேகரின் இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால், மூவரையும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கூற முடியாது.
எனவே, மூவரும் மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் தாசில்தார் ஆகியோரிடம் அளித்த விண்ணப்பத்தை, பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று ஶ்ரீ தேவி கணவர் போனி கபூர் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்ட நிலையில் விசாரித்த நீதிபதிகள் நான்கு வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீதேவி சொத்தை வாங்கிய சம்பந்த முதலியார் மகன் சந்திரசேகரனின் இரண்டாவது மனைவியின் மகள் புழுதிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசியவர்
266 ஏக்கர் 1947 ஆம் ஆண்டு சம்பந்த முதலியார் பெற்ற சொத்து. அவருக்கு ஐந்து மகன்கள் என் தந்தை இரண்டாவது மகன். என் தாத்தாவின் வாரிசுகளில் ஒருவரான ராணியம்மாள் ECR யில் 4 ஏக்கர் 17 சென்ட் இருந்த இடத்தை மற்றவர்கள் கவனம் இல்லாமல் விற்பனை செய்துள்ளார்.
அதை சரியாக விசாரிக்காமல் நடிகை ஶ்ரீ தேவி வாங்கியுள்ளார். 35 ஆண்டுகளாக பட்டாவை பெயர் மாற்றம் அவர்களால் செய்ய முடியவில்லை.
ஸ்ரீதேவி உயிரிழந்த பின் இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் இல்லாமல் போனி கபூர் போலியான சான்றிதழ் மூலம் பட்டாவை பெயர் மாற்றம் செய்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பட்டா பெயர் மாற்றம் செய்யும் முறை இது தொடர்பான விஷயங்கள் எங்கள் கவனத்திற்கு வரவில்லை.
உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் நான் போட்ட போது 12 வாரத்தில் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது போனி கபூர் பெட்டிஷன் போட்டு இருக்கிறார் இதற்கு நான்கு வாரங்களில் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள் முறையாக விசாரித்தால் அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது நிச்சயம் அதை சமர்ப்பிப்பேன்.
போனி கபூரிடம் எந்தவிதமான ஆவணமும் இல்லை. இதற்கிடையில் போனி கபூர் இந்த இடத்தை விற்க பார்க்கிறார்.
எங்களுக்கு உரிமை உள்ள சொத்தில் முழுமையான தீர்ப்பு கிடைக்கும் வரை போனி கபூர் இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య