சென்னை புளியந்தோப்பு வடசென்னை பகுதியில் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பாக 1500 வது மிலாதி விழா மற்றும் பேரணி பொதுச் செயலாளர் ஜனா வா அக்ரம்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாபெரும் விழாவில் மாநில அமைப்பாளர் சுலைமான் அன்சாயி அவருடன் மாநில இணைச் செயலாளர் ஜனாப் எம் பி நாசர் மாநில பொருளாளர் சையது கவுஸ் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் அல்தாஸ் மத்திய சென்னை மாவட்ட தலைவர் எப் சேட்டுப்பா மாநில செய்தி தொடர்பாளர் எஸ் முகமது ஹகில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த 1500 வது மிலாதி விழா நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அமைப்பின் மாநில மாவட்ட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் மிலாதி விழா மற்றும் பேரணியில் தமிழ்நாடு சுன்னத் ஜமாத் மற்றும் ராஷ்ட்ரிய உலமா கவுன்சில் சார்பில் சென்னை புளியந்தோப்பு நான்காவது தெருவில் இருந்து பேரணி துவங்கப்பட்டு தாஷாமகான் நியூ பேர்ரான்ஸ் சாலையில் பேரணி நிறைவு பெற்றது அதனை தொடர்ந்து மாபெரும் மாநாடு நிகழ்வு நடைபெற்றது
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பொதுச் செயலாளர் ஜனா வா அக்ரம்கான் அவர்கள் கூறியது இந்த மாபெரும் மிலாது விழா நன்னாளில் ஏழு எளியோருக்கு உதவுகின்ற வகையில் இஸ்லாமிய நற்சிந்தனையாளர்களும் , உதவிக்கரம் செய்து வருவது பெரும் மகிழ்ச்சி என்றும் எல்லா வல்ல இறைவன் அல்லாவின் பெயரால் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் வாழ வழி செய்ய வேண்டும் அதற்கு எல்லாம் வல்ல இறைவன் அல்லா அவர்கள் துணை புரிவார் என தெரிவித்தார்
இந்தப் மீலாது பேரணி தமிழ்நாடு சுன்னத் ஜமாத் சார்பில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக பொதுச் செயலாளர் ஜனா அக்ரம்கான் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் இப்பகுதியில் வெகு சிறப்பான முறையில் நடைபெறும் வேளையில் இந்த ஆண்டு சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இந்த மிலாது விழாவில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அதே வேளையில் சென்னை மாநகரத்தில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் செல்வதற்கு சவாலாக உள்ளது எனவே அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் சகோதரிகளும் யாருக்கும் எந்த தொந்தரவும் அளிக்காமல் அன்பாகவும் அரவணைப்புடனும் நாம் அல்லாஹ்வை நினைத்து பணியாற்ற வேண்டுமென தெரிவித்தார்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?