ரஷ்யாவில் ஸ்டவரபோல் மருத்துவ பல்கலைகழகத்தில் தமிழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ் படிக்கச் செல்லும் மாணவர்களை வழி அனுப்பும் விழா 13.09.2025 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்களின் சங்கத்தின் தலைவரும் ஏ.ஜே.டிரஸ்ட் எஜிகேஸ்னல் கன்சல்டன்ஸி தலைவருமான டாக்டர் ஏ.அமீர்ஜஹான் மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பினார்.

இந்த நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் மருத்துவ பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து டாக்டர் அமீர்ஜஹான் நிருபர்களிடம் கூறும்போது மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாகவும் விளங்குகிறது அந்த வகையில் இன்று கடைக்கோடியில் உள்ள கிராம மாணவர்களும் மருத்துவம் படிக்க முடியும் அதற்கு உதாரணமாக நம்முடைய இந்திய திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்கள் விளங்குகிறார் அதனை நினைவு கூர்ந்து நாம் மருத்துவராக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் மருத்துவராகும் கணவினை நினைவாக்க வேண்டும் ஏழை எளிய மாணவர்களும் மருத்துவம் படிக்க குறைந்த செலவில் உலகதரம் வாய்ந்த மருத்துவ கல்வியை வழங்குவதில் ஸ்டவரபோல் மருத்துவ பல்லைக்கழகம் முதல் இடத்தில் இருக்கிறது. நூறாண்டுகள் சிறப்பாக செயலாற்றி வருவதுடன் தரமான பயிற்சியினை தருவதால் ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்கள் அங்கே எம்.பி.பி.எஸ் பயிலுகிறார்கள். குறிப்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களின் மகன் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பினை முடித்தார் அத்துடன் இந்தியாவில் நடத்தப்படும் ஸ்கீரினிங் டெஸ்ட் தகுதி தேர்விற்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தங்கும் வசதி, உணவு வசதி, அனைத்தும் ஒரே வளாகத்தில் கிடைக்கிறது. சர்வதேச புகழ்பெற்ற மருத்துவர்களால் ஆங்கில மொழியில் கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாண்டு மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோர்களும் விமானத்தில் செல்கிறார்கள். இதனை முதன்முறையாக மருத்துவக்கல்வி சுற்றுலாவாக ஏ.ஜே.டிரஸ்ட் கன்செல்டன்சி நிறுவனமும், அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற டாக்டர்கள் சங்கமும், ரஷ்யாவின் ஸ்டவரபோல் மருத்துவ பல்கலைக்கழகமும் இணைந்து நடத்துகிறது. இந்த கல்வி சுற்றுலா நிகழ்ச்சி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் மருத்துவ கல்வி வரலாற்றில் சென்னை மாநகரும், ரஷ்யாவில் உள்ள ஸ்டவரபோல் மாநகரும் இணைந்து குறைந்த செலவில் எம்.பி.பி.எஸ். படிக்க வழிகாட்டும் நகரங்களாக (Twin City) உருவாக்கும் முயற்சியில் ஏஜே டிரஸ்ட் டைரக்டர் டாக்டர் ஏ.நஜீரூல் அமீன் ஏற்பாடுகள் செய்து வருகிறார். மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு சென்னையில் இருந்து விமானத்தில் சென்று ஸ்டவரபோல் மருத்துவ பல்கலை கழகத்தையும், மாநகரத்தையும் சுற்றி பார்த்து, மாணவர்கள் தங்கும் விடுதி, படிக்கும் வகுப்பறைகள் அனைத்தையும் நேரில் கண்டு வர அரிய வாய்ப்பாக அமைகிறது. ரஷ்ய நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும் நேரில் காணும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். ஏஜே டிரஸ்ட் நிறுவனத்தின் 35 ஆண்டுகால மருத்துவ கல்வி சேவையில் வரலாற்று சாதனையாக இதனை நடத்துவதாக டாக்டர் அமீர்ஜஹான் கூறினார்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai