தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ பாஷ்யகார கைங்கர்ய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் கே தினேஷ்குமார் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில், திருமலை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு ஸ்ரீவாரிக்கு 30 திருகுடைகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை காலை, சென்னை தி.நகரில் உள்ள வெங்கட நாராயண சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற திருப்பதி தேவஸ்தான திருகுடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு. வேத மந்திரங்கள் முழங்க, TTD கோவில் அர்ச்சகர்கள் வேதப்பூர்வமான முறையில் குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து மேல தாளம் முழங்க பஜனை பாடிக் கொண்டு நான்கு மாடவீதிகளிலும் திருப்பதி திருகுடை ஊர்வலம் ஸ்ரீ பாஷ்யகார கைங்கர்ய அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கே. தினேஷ் குமார், அவர்கள் மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்வில் அறங்காவலர் மாதவ நாயுடு, அறக்கட்டளை சார்ந்த மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.ஆர்.சேகர், எம்.ஜி.லட்சுமிபதி ராமச்சந்திரன், முரளி மற்றும் ராஜராம் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் சென்னை தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான ஏஇஓ பார்த்தசாரதி, முன்னாள் தலைவர் என். ஸ்ரீகிருஷ்ணா, முன்னாள் உறுப்பினர்கள் பி.வி.ஆர். கிருஷ்ணா ராவ், ஊரா லட்சுமி நரசிம்ம ராவ், மோகன் ராவ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே. மோகன், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் திருகுடைகளுக்கான பூஜைகளில் பங்கேற்று திருகுடைகளுடன் நடந்து சென்றனர்
மேலும் ஸ்ரீவாரி கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் கோவிந்த கோவிந்த என கோஷமிட்டு திருகுடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நிகழ்வில் ஊர்வலத்துடன் சுப வாத்தியங்கள் வாசித்தல், கோவிந்த நாமஸ்மரணம் பாடி பஜனைகள் இசைக்கப்பட்டன. பின்னர், திருகுடைகளை ஒரு சிறப்பு வாகனத்தில் திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு இறைவனை தரிசனம் செய்து, அங்கேயே தங்கி, ஊர்வலமாக திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பேசிய அறக்கட்டளையின் நிறுவனர் கே. தினேஷ் குமார், கூறியது சென்னை தி.நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இருந்து திருமலைக்கு திருகுடைகளை எடுத்துச் செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.. இந்த வாய்ப்பை வழங்கிய தியாகராய நகர் திருப்பதி தேவஸ்தான கோயில் நிர்வாகிகளுக்கு அவர் சிறப்பு நன்றியினை தெரிவித்துக் கொண்டார் மேலும் ஸ்ரீ வாரிக்கு மொத்தம் 30 திருகுடைகள் காணிக்கையாக வழங்கப்படுவதாகவும், அவற்றில் இரண்டு திருகுடைகள் சென்னை டிடிடிக்கும், 17 திருகுடைகள் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கும், ஒரு திருகுடை புகழ்பெற்ற கோயிலுக்கும், மீதமுள்ள 9 திருகுடைகள் திருமலையில் ஸ்ரீவாரி கருட சேவைக்காக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai