சென்னை பிராட்வே ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அகத்தர உறுதி அமைப்புக்குழு, நட்சத்திர மாணவர் மன்றம் மற்றும் கலாலயா நுண்கலை சங்கம் இணைந்து 23.09.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி கலாச்சார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ஸ்ரீ வூட்டுகுரு சரத்குமார் பொறுப்பு முதல்வர் டாக்டர் பி.பி. வனிதா அவர்கள், துணை முதல்வர் டாக்டர் எம்.வி. நப்பின்னை அவர்கள், அகத்தர உறுதி அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.பரணி குமாரி ஆகியோர் கலந்து கொண்டு நவராத்திரி நிகழ்வை சிறப்பித்தனர்.
அமைதி மற்றும் வளம் செழிப்புடன் ஆசிர்வதிக்க வேண்டி வாசவாம்பா தேவிக்கு பிரார்த்தனை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பக்திச் ஆன்மாவை நிரப்பும் பாடல்களாலும், திறமையான மாணவர்களால் வழங்கப்பட்ட பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளின் வரிசையாலும் நடைபெற்றது.
இதில் தமிழில், முனைவர் கி. லட்சுமி மற்றும் தெலுங்கில், முனைவர் பி.எஸ். மைதிலி ஆகியோரது வர்ணணையில்
கலாச்சார நிகழ்ச்சிகளாக
- புஷ்பாஞ்சலி
- முருகன் கோவுத்துவம்
- வலம் தரும் திருவே
- தெலுங்கு நடனம்
- மாடு மெய்க்கும் கண்ணே
- போ ஷம்போ
- மயிலாட்டம் நடனம்
- ஐகிரி நந்தினி
- வேப்பிலை நடனம்
- கிராமிய நடனம்
- இந்தி நடனம்
- காவடி சிந்து
- சாமுண்டேஸ்வரி வரலாறு
- கருப்புசாமி நடனம்
- விளக்கு நடனம் (நரசிம்ம நடனம்)
மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.
நவராத்திரியை மகிழ்ச்சி, பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடும் பக்தி, கலாச்சாரம் மற்றும் ஒற்றுமையின் உண்மையான பிரதிபலிப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்தது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினர்.


More Stories
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா
SRM School of Law Adds 35 New Faculty Members in a Major Push towards Internationalisation
SRM Institute of Science and Technology Organized International Conference on Human Capital Management