March 7, 2026

கரூர் பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழப்பு காரணமான நடிகர் விஜய் கைது செய்யப்பட வேண்டும்

கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழப்பு காரணமான நடிகர் விஜய் மற்றும் தவெக முக்கிய பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் என சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா அவர்கள் தலைமையில் விஜய்க்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி ஜி சிவா, அவர்கள் கூறியது கரூர் மாவட்டத்தில் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் என உயிரிழந்துள்ளனர்.

இதற்க்கு விஜய் மற்றும் தவெக முக்கிய பொறுப்பாளர்கள் தான் காரணம்

தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை சரியான நேரத்தில் துவக்குவதில்லை

காலம் தாழ்த்தி வருவதால் உணவு,நீர் இல்லாமல் மூச்சு திணறி 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர்

எனவே கூட்ட நெரிசலில் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றார்

About Author