.சென்னை பூக்கடை தொலைபேசி பரிமாற்றம் BSNL அலுவலகம் வாயிலில் CGM-ன் ஆணவப் போக்கை கண்டித்து மதிய உணவு இடைவேளையில் BSNL அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து தலைமைப் பொது மேலாளரை மாற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

இதில் NFTE அகில இந்திய தலைவர் சி கே . மதியவாணன், BSNLEU மாநிலச் செயலாளர் ஸ்ரீதர் சுப்பிரமணியன், SNEA மாநிலச் செயலாளர் புத்த தேவ்.AIGETOA மாநிலச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கினை வெளிப்படுத்தினர்.
மேலும் தற்போதைய CGM பார்த்திபன் செயலால் சேவை வீழ்ச்சி,வருவாய் குறைவு, துன்புறுத்தல் நடந்து வருவதால் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் ஊழியர்கள் திடீர் இடமாற்றம், செய்தல் பதவி மாறுதல் , 2வது சனிக்கிழமை விடுமுறை நீக்கம் இதனால் ஊழியர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.மேலும்அங்கீகாரம் பெற்ற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது .
CGM அணுகுமுறை சரியாக இல்லாததால் தனியார் நிறுவனங்கள்
வெற்றிடத்தை நிரப்பி வருகின்றன.
ஆகவே எங்களுடைய கோரிக்கை தற்போதைய CGMமை உடனடியாக இங்கிருந்து மாற்றி நிர்வாக சிக்கலை தீர்க்க வேண்டும், சங்கங்களும் ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக வாபஸ்பெற வேண்டும்,
நியாயமான கொள்கைகளுடன் கூடியஆலோசனை கட்டமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும்,
பொது சேவைமீண்டும் உயிர் பிழைக்க 4G தயார் நிலை, FTTH விரிவாக்கம், அரசு மற்றும் பெரிய வாடிக்கை யாளர்களை பாதுகாக்க வேண்டும் என கூறினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 250 பேருக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.