சென்னை கேகே நகரில் உள்ள இல்லத்தில் நம் நல் குடும்ப வாழ்க்கை வழிகாட்டியான பத்ரி நாராயணன், 65 வயதில், பார்க்கும் அனைவரும் வாழ்க்கையும் விழிப்புணர்ச்சி பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், தனது 45 வருட மிஸ்டிகல் சேகரிப்புகளை கொண்டு, 3 மாத காலமாக தனித்தே மஹாமாயா குகை கோவிலை உருவாக்கி உள்ளார்.

இந்த மிஸ்டிக்கல் குகை கொலு, நம்முள் மறைந்து இருக்கும் பிரபஞ்சத் தேஜஸ் என்ற கோட்பாட்டை உயிர்த்தெழுப்பும் ஒரு சிறந்த படைப்பு. மனைவி ஜெயலட்சுமியுடன் பத்ரி நாராயணன் அர்ப்பணிப்புடன் உருவாக்கிய இந்த மஹாமயி திருத்தலம் போன்ற கொலு, மந்திரமிகு அற்புதங்கள் நிறைந்த ஒரு தரிசனமாகும்.
இங்கே குகையில், ஆயிரக்கணக்கான லிங்கங்கள், சாளக்கிராமங்கள், ருத்ராக்ஷங்கள், பல சக்தி கல்கள், கிரிஸ்டல் க்ளஸ்டர்கள், பூமியின் ஆழத்தில் இருக்கும் சக்திப் பாறைகள், அற்புதக் கிரிஸ்டல்கள், ரத்தினங்கள், பெரிய சங்குகள், வலம்புரி சங்குகள், சிப்பிகள், விஷ்ணு சக்கரங்கள், முத்துகள் மற்றும் பல சமுத்திரத்தின் உள்ளே இருந்து கிடைக்கும் இயற்கை அதிசயங்கள், மிதக்கும் கல், பித்தளை- பஞ்சலோக – கல் சிலைகள், மிக சிறிய மூர்த்திகள்,
பிரமீடுகள், ஹீலிங் கற்கள், நீர்வீழ்ச்சிகள், கைலாசம், வைகுண்டம், மற்றும் பல அற்புத சேகரிப்புகளை கண்டறியுங்கள்.
ருத்ராக்ஷ மலை, பலமுக ருத்ராக்ஷங்கள், கற்பகவிருக்ஷம், மகாமாயி சர்வ ஆத்ம இரக்க்ஷகி, விஷ்வரூபிணி, ஐஸ்வர்ய லக்ஷ்மி, மகாமேரு, ரெயின்போ கிரிஸ்டல் லிங்கம், மரகத லிங்கம், நர்மதா லிங்கம், சிவசக்தி, மகாமாயா, பாரத மாதா, மூங்கில் காலபைரவர், வண்ணமயமான பாம்புகள் மற்றும் பலவற்றின் சக்திகளை உணருங்கள்.
இங்கு பாரதிய கலாச்சாரம் = நற்பண்புகள், தேசியம், தெய்வீகம், நம் கடமை, வாழ்க்கை குறிக்கோள் & ஆனந்த வாழ்க்கை மற்றும் தெய்வீக அருள் அனைத்தும் உணர்ந்து பெறுவது நிஜம்.
மகாமாயா குகைக் கோயிலுக்குள் செல்பவர்கள், ஸ்படிகம், பிரமிடு, வண்ணம், பஞ்ச பூதம், குண்டலினி மற்றும் முழுமையான காஸ்மிக் எனர்ஜி ஆகியவற்றின் சக்தியால் ஒரு பரிமாற்ற அனுபவத்தில் சூழப்படுவீர்கள்.
நல் வெற்றி வாழ்க்கை வழிகாட்டி பத்ரி நாராயணன் செய்தியாளரிடம் நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவியையும் இரண்டாவது மூன்று நாட்கள் மகாலட்சுமியும் மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் ஞானத்தையும் செல்வத்தையும் பெற பிரார்த்திக்கிறோம் நம்மை நாம் பாதுகாக்க நவராத்திரி விழா கொண்டாடுகிறோம் துர்க்கை அம்பாள் ஒன்பது நாட்கள் நமக்கு அருள் புரிந்து மகா சக்தியாகிய மகிஷா மர்த்தினியாக இந்த உலகத்தை காப்பாற்றும் தாயாக நம் வீட்டில் இருக்கும் குழந்தையாக விஜயதசமி அன்று கெட்ட சக்திகளை அழித்து இவ்வுலகம் நன்றாக வாழவும், அனைத்து குடும்பங்களும் ஆனந்தமாக வாழவும், அவதாரம் எடுத்து வருகிறார். குடும்பம் என்பது தெய்வாம்சம் பொருந்தியது அப்படிப்பட்ட உயர்ந்த கலாச்சாரம் தான் நம் பாரத கலாச்சாரம். பெண்மையை மதித்து, தெய்வம், நாடு, வீடு, மற்றும் அனைத்து உயிரினங்களும் ஆனந்தமாக வாழ மஹாதுர்க்கையை வணங்கி வாழும்படி கேட்டுக் கொண்டார்.
மஹாமாயா குகைக்கோவில் கொலுவில்,
இந்து முன்னணி தென் பாரத அமைப்பாளர் திரு பக்தன் ஜி, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக ஆன்மிகப் பிரிவின் மாநில செயலாளர் டாக்டர் ப்ரீத்தி சாய்
பாஜக தென் சென்னை மாவட்டத் தலைவர் சஞ்சீவி, பாஜக ஆன்மீகப் பிரிவின் மாவட்ட தலைவர் ராமநாதன்,
ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai