பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 109-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அருள் பெத்தய்யா காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி சார்ந்த பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மேடையில் பேசிய தலைவர்கள் மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் மக்கள் மத்தியில் மாபெரும் நன்மதிப்பு பெற்ற ஒரு சிறந்த மாமன்ற உறுப்பினராக அவருடைய பணி மிக சிறப்பான பணி என்றும் அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி ஆற்ற வேண்டும் இன்னும் பல நன்மைகளையும் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என மனதார வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர் கராத்தே செல்வம் வட்டத் தலைவர் மோகன் நெல்சன் பிரின்ஸ் எம் எஸ் பாஸ்கர் 112 வது வட்டத் தலைவர்கள் கார்த்திக் சையது அமித் ராஜ் மற்றும் நிர்வாகிகள் துரைவேல் தாஸ் கமல் சுந்தர் கந்தன் புருஷோத்தமன் மற்றும் மகளிர் அணி சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாட்டினை பகுதி தலைவர் கராத்தே செல்வம் அவர்கள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?