அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் மற்றும் செங்கல் தொழிலாளர்கள் நல தங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா தேசிய குலாளர் சங்க மாநில நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பொதுக்குழு கூட்டம் சங்கமித்ரா அறக்கட்டளை நடத்தும் திருச்சி மாவட்ட கல்வியாளருக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழாவாக 25 10 2025 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் எஸ் ஆர் சி கல்லூரி காலையில் உள்ள சுருதி ஸ்ரீ ஹாலில் நடைபெற்றது.
இந்த முப்பெரும் விழாவிற்கு தேசிய தலைவர் டாக்டர் வி தியாகராஜன் தேசிய துணை தலைவர் கே எஸ் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கண்ணன் மாநில பொதுச் செயலாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர்.
தொடர்ந்து இந்த முப்பெரும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக துளிர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு இந்த முப்பெரும் விழாவினை சிறப்பித்து எழுச்சி உரை வழங்கினார் தொடர்ந்து இந்த முப்பெரும் விழாவில் மாநில தொழிற்சங்க அமைப்பாளர் செந்தில் ராமலிங்கம் துரை கார்த்திக் சண்முகராஜ் தொழிற்சங்க துணை செயலாளர் முருகன் உள்ளிட்ட மாநில மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அவை மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும் மேலும் தொடர்ந்து நல வாரியம் அமைத்திட பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவே தமிழக அரசு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க மேலும் மண்பான்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஐந்தாயிரம் ரூபாயை 10,000 ஆக உயர்த்தி அனைவருக்கும் கிடைக்கின்ற வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த முப்பெரும் விழாவினை மிக சிறப்பான முறையில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக சார்பில் மாநில மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இணைந்து ஏற்பாட்டினை செய்திருந்தனர் நிகழ்ச்சியின் நிரைவாக கலிங்க செல்வம் நன்றி உரை வழங்கினார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.