அனைத்து இந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு தென் சென்னை மாவட்டம் சார்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தேவாலய அரங்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் சிறுபான்மை பிரிவின் தலைவர் பிஷப் டாக்டர் ஜெரால்ட் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஏ ஐ சி சி சியின் தலைவர் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் அதனைத் தொடர்ந்து மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் சான்று வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளரை சந்தித்த ஏ ஐ சி சி சி யின் தலைவர் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் கூறியது தமிழக முதல்வர் அவர்களுக்கு அனைத்திந்திய கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அனைத்திந்திய கிருத்துவ சபைகள் கூட்டமைப்பு சார்பில் கிருத்துவ மக்கள் அனைவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் கிறிஸ்துவ மக்களின் நலன் காக்க தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் அவர்களிடம் வைத்திருந்தோம் அதனை தமிழக முதலமைச்சர் கிறித்துவ மக்களின் நலனில் முழு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் அதேபோல் கல்லறை அமைக்க கோரிக்கைகள் வைத்திருந்தோம் அதனை ஒரு சில மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது இன்னும் குறிப்பாக சென்னை பட்டணம் தென் சென்னை பகுதி மயிலாப்பூர் மந்தைவெளி தாம்பரம் பல்லாவரம் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அடக்கம் செய்வதற்கு கல்லறை தோட்டம் இல்லாமல் மிக கடினமான நிலை உள்ளது எனவே தமிழக முதலமைச்சர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் வேண்டுகோள் வைத்தார் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் கல்லறை தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்துள்ளார் அது மட்டுமல்ல கிறித்துவ மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிய பங்கிட்டினை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நம்முடைய உரிமைகளையும் நலன்களையும் பெற வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாகும் அதேபோல் வருகின்ற ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெற உள்ளது அதற்கு அனைத்து கிருத்துவ பெருமக்கள் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார் இந்த மாபெரும் கூடுகை கூட்டத்தில் மாநில மாவட்ட போதகர்கள் பேராயர்கள் கிறித்துவ பெருமக்கள் மகளிர் அணி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?