காட்டாங்குளத்தூர், அக்டோபர் 30, 2025: எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி), ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) உள்ள குழந்தைகளுக்கு உதவஒரு புதுமையான, ஐஓடி (IoT)-யால் இயக்கப்படும் இடையீட்டுதொழில்நுட்ப அடிப்படையிலான UASIR (பயனருக்கு ஏற்ற தழுவல் உணர்திறன் ஒருங்கிணைப்பு அறை)-ஐதொடங்கியிருக்கிறது.
இந்த தொழில்நுட்ப பரிமாற்றம், காட்டாங்குளத்தூர், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புலத்தின், மின்னணுவியல் மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் (ECE) துறைக்கும், எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யின் எஸ்ஆர்எம் தொழில்சார் சிகிச்சை கல்லூரிக்கும் இடையே நிகழ்ந்திருக்கிறது. இது வெவ்வேறுதுறைகளுக்கு இடையிலான சிறப்பான ஒத்துழைப்பிற்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
தொழில்நுட்ப பரிமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து, எஸ்ஆர்எம்எம்சிஹெச்ஆர்சி (SRMMCHRC)-யில் உள்ள ஆட்டிசம் சிகிச்சைக்கான சிறப்பு மையத்தில், பயனருக்கு ஏற்ற தழுவல் உணர்திறன் ஒருங்கிணைப்பு அறையை (UASIR), எஸ்ஆர்எம்ஐஎஸ்டி துணைவேந்தர், பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் அக்டோபர் 28, 2025 அன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் எஸ்ஆர்எம்எம்சிஹெச்ஆர்சி-யின் இணை துணைவேந்தர் (மருத்துவ அறிவியல்), பேராசிரியர் நிதின் எம். நாகர்கர்; எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யின் கூடுதல் பதிவாளர் (MSL), டாக்டர் டி. மைதிலி; எஸ்ஆர்எம்எம்சிஹெச்ஆர்சி-யின் மருத்துவ கண்காணிப்பாளர், டாக்டர் ஆர். வெங்கட்ராமன்; எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, தொழில்சார் சிகிச்சை கல்லூரியின் டீன், பேராசிரியர் யு. கணபதி சங்கர்; எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பள்ளியின் தலைவர், பேராசிரியர் கே. விஜயகுமார்; மற்றும் எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, ECE துறையின் தலைவர், பேராசிரியர் எம். சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரும், ECE துறையின் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியருமான, டாக்டர் கணபர்த்தி வி. பனி குமார், UASIR-இன் அவசியத்தை எடுத்துரைத்தார். இது ஒரு குழந்தையின் தனிப்பட்ட உணர்திறன் சுயவிவரத்தின் அடிப்படையில் சிகிச்சைமுறை தூண்டுதல்களைத் பிரத்யேகமானதாக்க ஐஓடி (IoT) மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தும் ஒரு பயனருக்கு ஏற்ற தழுவல் உணர்திறன் சூழல் என்று அவர் விளக்கமளித்தார். எஸ்ஆர்எம்ஐஎஸ்டி, தொழில்சார் சிகிச்சை கல்லூரியின் டீன், பேராசிரியர் யு. கணபதி சங்கர், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உணர்திறன் ஒருங்கிணைப்பு இடையீட்டு சிகிச்சைகளை மேம்படுத்துவதில் UASIR-இன் மருத்துவ ரீதியான சரிபார்ப்பு மற்றும் சிகிச்சையின்தாக்கம் குறித்து விளக்கினார். அதைத் தொடர்ந்து, ஆய்வுசெயல்திட்ட இணை நிபுணர்-I (Project Associate-I), திரு. துண்டி உமாமகேஸ்வர ரெட்டி, UASIR-ன் செயல்பாட்டு முறைகள் மற்றும் அதன் இன்டராக்டிவ் அம்சங்கள் குறித்துசெயல்முறை விளக்கத்தை வழங்கினார். இந்த அமைப்பு,தனிப்பட்ட குழந்தைகளின் உணர்திறன் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்கிறது என்பதை அதன் மூலம்அவர் செய்து காட்டினார்.
பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன் பேசுகையில், இத்திட்டத்தை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யின் பன்முகத் துறைச் சிறப்பிற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று பாராட்டினார்.தொழில்நுட்பம், சிகிச்சை மற்றும் கனிவான புரிந்துணர்வுஆகியவை ஒன்றிணைந்து பயனுள்ள சமூகத் தாக்கத்தை உருவாக்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். டாக்டர் நிதின் எம். நாகர்கர், சமூகத்திற்கு சேவை செய்யும் சுகாதாரப் புத்தாக்ககண்டுபிடிப்புகளாக தொழில்நுட்ப ஆராய்ச்சியை மாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பயனருக்கு ஏற்ற தழுவல் உணர்திறன் ஒருங்கிணைப்பு அறை (UASIR), இந்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST), அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தால் (SERB) மைய ஆராய்ச்சி உதவித்தொகை 2021 (CRG/2021/004097)-ன் கீழ், ₹18.95 லட்சம் நிதியுதவியின்ஆதரவைப் பெற்றிருக்கிறது. இத்திட்டம் மார்ச் 15, 2022 அன்று தொடங்கப்பட்டு, செப்டம்பர் 14, 2025 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மற்றும் மலிவு விலையிலான இந்த சாதனம், ஐஓடி-அடிப்படையிலான தழுவல் கட்டுப்பாடுகளை, பபிள் ட்யூப், இரட்டை பபிள் சுவர் பேனல், தொடு உணர்வு பேனல், குரலுக்கு பதிலளிக்கும் இன்ஃபினிட்டி ஒளிரும் கண்ணாடி, ஊடாடும் எண்ணெழுத்து பேனல்கள் மற்றும் ஆப்டிகல் ஃபைபர் போட் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை சாதனங்களுடன் ஒருங்கிணைக்கிறது. வழக்கமான உணர்திறன் அறைகளைப் போலல்லாமல், UASIR ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சரிசெய்யக்கூடிய உணர்திறன் அனுபவங்களை வழங்குவதுஇதன் தனிச்சிறப்பாகும். இதன்மூலம் உணர்திறன் செயலாக்கம், தழுவல் நடத்தை, சமூக உறவு மற்றும் கற்றல் ஆகியவற்றை இதுமேம்படுத்துகிறது.
இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட முன்மாதிரி சாதனங்களும்மற்றும் ஒருங்கிணைந்த UASIR அமைப்பும், தொழில்சார் சிகிச்சை கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்ட முன்னோடிசோதனைகள் மூலம் சரிபார்த்து உறுதிசெய்யப்பட்டன. சிகிச்சை நிபுணர்களும் மற்றும் ஆட்டிச பாதிப்புள்ளகுழந்தைகளும் இதற்கான அமர்வுகளில் பங்கேற்றனர். இந்த சோதனைகளின் முடிவுகள், மேம்பட்ட உணர்திறன் ஈடுபாடு மற்றும் சிகிச்சையாளர்-இயக்கும் தழுவல் திறனை வெளிப்படுத்தின; இன்னும் இந்த அமைப்பின் மருத்துவப் பொருத்தம் மற்றும் செயல்பாட்டு நம்பகத்தன்மையை இவைஉறுதிப்படுத்தின.
இந்தியாவில் இத்தகைய முதல் முயற்சியான இது, தொழில்நுட்பத்தையும் சிகிச்சையையும் இணைப்பது மட்டுமல்லாமல், ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் இன்னோவேட் இந்தியா போன்ற தேசிய திட்டங்களுடனும் இணைந்ததாகஇருக்கிறது. இது, உள்நாட்டு ஆராய்ச்சியை சமூகத்தின் மீதுசிறந்த தாக்கமாக மாற்றும் எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யின் தொலைநோக்குப் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பன்முகத் துறை ஒத்துழைப்பு மூலம் புதுமைகளை வளர்ப்பதற்கும், வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான உள்ளடக்கிய மற்றும் மலிவு விலை சிகிச்சை தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் எஸ்ஆர்எம்ஐஎஸ்டி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியது.


More Stories
SRM School of Law and Tessolve Forge Strategic Alliance to Shape Future-Ready Legal Professionals
கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகின்றன
SRMIST Launches 15-Month PGDM-X Programme for Working Professionals in Collaboration with NUS Singapore