சென்னை பரங்கி மலையில் உள்ள மான்போர்ட் பள்ளியில் 9 11 2025 அன்று ஆஸ்கர் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் மற்றும் கல்சர் கவுன்சில் இணைந்து கராத்தே யோகா சிலம்பம் உள்ளிட்ட மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி மிக எழுச்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் இளைய கட்டபொம்மன் கலந்து கொண்டார் உலக சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் சிலம்பம் முனைவர் எஸ் சுதாகர்
இந்திய யோகாசன ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மினிஸ்டரி ஆஃப் ஆயுஷ் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன் ஆகியோர் அமைப்பாளர்களாக பங்கேற்றனர் இந்நிகழ்வில் 4000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களுடைய சாதனைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் இளைய கட்டபொம்மன் மற்றும் உலக சிலம்பம் போர்ட்ஸ் அசோசியேஷன் நிறுவனத் தலைவர் சிலம்பம் முனைவர் எஸ் சுதாகர் ஆகியோர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது கனிகளிலே முக்கனி போன்று தற்காப்பு கலையில் சிலம்பம் யோகா கராத்தே ஆகியவை முக்கனிகள் ஆகும் இக்கலைகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வேலைவாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் எனவும் விளையாட்டு வீரர்களின் சங்கங்களை ஒன்றிணைத்து தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு தனி நல வாரியம் அரசு அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் முன்பெல்லாம் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு வந்து பயன் பெற்றனர் தற்போது திராவிட மாடல் ஆட்சிக்காலத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சீரிய முயற்சியால் விளையாட்டுத் துறையில் சோதனை படைத்து வருகின்றனர் மேலும் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது திராவிட மாடல் ஆட்சியில் உலக நாடுகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் சென்னை நோக்கி வருகின்றனர் தற்போது தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் சாதனைகள் நிகழ்த்துகின்றனர் எப்படி மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தார்களோ அதேபோன்று விளையாட்டு வீரர்கள் சென்னை நோக்கி வருகின்றனர் இப்படி முன்னேற்றம் ஏற்பட்டதற்கும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு அளித்ததற்கு விளையாட்டு வீரர்களுக்கு உயர்ந்த தர உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உதவிகள் செய்வதற்கும் தமிழக முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனர் இந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆர்ட் மற்றும் கல்சர் கவுன்சில் ஆர்கனைசிங் செயலாளர் எம் முருகன் அவர்கள் மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య