ஸமதா விஷ்ணுஸ்ர நாமத்திலுள்ள பகவானின் 1000 நாமங்களோடு இந்த ஸாப்தான்ஹிக பஞ்ச குண்டாத்மக ஸமதா இஷ்டி என்ற மாபெரும் யாகத்தை திரிதண்டி ஸ்ரீ மன் நாராயண இராமானுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளின் தலைமையில் சென்னை பெரம்பூரில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் தினந்தோறும் காலையில் தீர்த்த கோஷ்டியும், அதனை தொடர்ந்து யாகம்,திருமஞ்சனம்,பூஜைகள்மற்றும் பூர்ணாஹதி நடைப்பெற்றன. மாலையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்,கலை நிகழ்ச்சிகள், பூர்ணாஹதி நடைப்பெற்றது.
இந்த நிகழ்வில் ஒரு பங்காக ஜெகதாசார்யா
1000 மெமரபல்
சபா சார்பாக ஸ்தாபர்கள் ஊசூரு திரு. நந்தகுமார் திருமதி ஊசூரு லதா அவர்கள் 12.11.2025ம் தேதி புதன்கிழமை காலை சின்ன ஜீயர் ஸ்வாமிகளை சந்தித்து “ஆழ்வார் ஆச்சாரியார் மந்திரம்” வரைபடமும், நினைவு சின்னமும் கொடுத்து சன்னதிகளின் விவரங்களை கூறி மங்களாசாசனம் பெற்றுக் கொண்டார்கள். “ஜகதாச்சார்யா 1000மெமரபல் சபா” ஸ்தாபகர்கள் திரு.ஊசூரு நந்தகுமார், திருமதி.ஊசூரு லதா மற்றும் அறங்காவலர்கள் திரு உம்மிடி ராஜேஷ்,திரு.கண்டசாலா பாலாஜி பிரசாத் கலந்து கொண்டனர்.
மேலும் “ஆழ்வார் ஆச்சாரியார் மந்திரம் ” சென்னை அருகில் திருவள்ளுவர் மாவட்டம் மணவூர் இரயில் நிலையம் திருவாலங்காடு அடுத்த பழையனூர் கிராமத்தில் பன்னிரண்டு ஆழ்வார்கள், திருவரங்கம்,திருமலை, காஞ்சிபுரம்,திரு நாராயண புரம் பெருமாள்களின் சன்னதிகளும்,ஆச்சாரியார்கள் இராமானுஜர், மணவாள மாமுனிகள் மற்றும் பரமபத வாசலுடன் 19 சன்னதிகளோடு மாடவீதியுடன் மந்திரம் கட்டும் பணி “ஜகதாச்சார்யா 1000மெமரபல் சபா” அவர்களால் 03.11.2025ம் தேதி திங்கட்கிழமை திரியோதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை 09.09 மணிக்கு மேல் 10.10மணிக்கள் தனுசு லக்னத்தில் கட்டுமான பணியை ஸ்தபதி திரு.S.சந்தான கிருஷ்ணன்,திரு.S.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அனைத்து பகவத் பாகவதர்க்ஷ ஹஸகள் ,தொண்டு நிறுவனங்கள் அனைவரும் முன்னின்று வந்து தாங்களால் இயன்ற அளவு பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்து விரைவில் மந்திரத்தை கட்டி முடித்து சம்ப்ரோக்ஷணமும் நடத்தி ஆழ்வார், ஆச்சாரியார், பெருமாள், தாயார்களின் அனுகிரகத்தை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் என கூறினார்கள்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?