சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ வெங்கடேஸ்வர பக்த சமாஜத்தின் நிறுவனத் தலைவர் தம்மினேனி பாபு அவர்கள் தலைமையில் 26.11.25 காலை ஏழு மணி அளவில் சிரவண திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பெருமாள், ஶ்ரீ தேவி, பூ தேவி தயாரிக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடர்ந்து மாலை, 6:30 மணி அளவில் பெரம்பூர், ராமச்சந்திரன் சாலையில் உள்ள ஶ்ரீ குருவாயூரப்பன் கோவிலிலிருந்து, பெருமாள், பக்தர்கள் சீர்வரிசை ஏந்தி மஞ்சள், மற்றும் பழ வகைகள் இனிப்பு வகைகள் இதில், லட்டு, மைசூர்பக், அதிரசம், ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, வாழைப்பழம் உள்ளிட்ட பலவகையான பட்சணம், பழங்களுடன், அலமேலு தாயாருக்கு விசேஷமான வஸ்திரம், ஆபரணங்கள், புஷ்பமாலை, ஶ்ரீ வெங்கடேஸ்வர பக்த சமாஜத்தின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்பட்டது .
அதனை தொடருந்து பக்தர்கள் ஊர்வலத்துடன் கோவிந்தா கோவிந்தா என நாம சங்கீர்த்தனம் சொல்லிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து மஞ்சள் காப்பு, திருமஞ்சனம், அர்ச்சனை, ஆராதனை, நாம சங்கீர்த்தனம், நடைபெற்று பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் விசேஷமாக சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் நிறுவனத் தலைவர் தம்மிநேனி பாபு செயலாளர் எஸ் வெங்கடராமன் துணைச் செயலாளர் பி ரவிக்குமார் பொருளாளர் கோதண்ட ராமையா துணைப் பொருளாளர் hd வெங்கடரமநுடு, டிரஷ்டி ராமச்சந்திரன் உறுப்பினர் எஸ் சரவணன் உள்ளிட்ட சமாஜத்தின் முக்கிய நிர்வாகிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?