சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69வது நினைவு நாளை முன்னிட்டு ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 113 வது ஆ வட்டத்தின் சார்பில் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவி 113 வது ஆ வட்ட செயலாளர் எம் என் விஷ்ணு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஊடகவியலாளர் தேரடி இந்திரகுமார் அவர்கள் கலந்து கொண்டு சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் தொடர்ந்து பேசிய ஊடகவியலாளர் இந்திரகுமார் அவர்கள் கூறியது சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அனைவருக்கும் ஏற்கும் வகையில் சட்ட முன்வடிவை அமைத்து அதனை செயல்படுத்திய மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்த சட்டத்தினை உலக நாடுகள் ஏற்கும் வகையில் அவருடைய கொள்கை கோட்பாடு அமைந்திருந்தது அதை மற்ற நாடுகளும் பின்பற்றும் அளவிற்கு இவருடைய செயல் திட்டங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனவே அவர் மறைந்தாலும் அவர் வகுத்து தந்த சட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும் அதேபோல் தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் டாக்டர் அம்பேத்கர் வழியிலும் பெரியார் வழியிலும் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் வழிகளிலும் தொடர்ந்து பின்பற்றி அதனை திறம்பட செயல்படுத்தி வருவதாக கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் எ ஆர் மணி மு ராமலிங்கம் தம்பிதுரை மு செ செந்தில் அப்துல்லாசா டி கே ரமேஷ் எம் என் அருண் துரைராஜ் மதிவாணன் செல்வம் ptc செல்வம் கிருஷ்ணமூர்த்தி ஜி கே ஐயப்பன் மோகன்தாஸ் கீர்த்தி ராஜ் அரவிந்த் பாபு கிஷோர் ஆர் பிரபு அச்சரப்பாக்கம் சூர்யா மகேஷ் ஜெய்சங்கர் சூர்யா அசோக் குமார் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?