சென்னை பிராட்வே உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முக ஓவியத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது .
ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடனும் படைப்பாற்றலுடனும் கொண்டாடியது. இந்த நிகழ்வில் முக ஓவியம் வரைதல் செயல்பாடு இடம்பெற்றது, இதில் மாணவர்கள் தங்கள் கலைத் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர். பல மாணவர்கள் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் துடிப்பான வண்ணங்களைக் காட்டி தீவிரமாக அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் இந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் அமைதியான முறையில் ஆடல் பாடலுடன் ஒருவருக்கொருவர் புத்தாண்டு கொண்டாட்டத்தை மகிழ்ச்சியான முறையில் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வில் அனைத்து மாணவர்களும் வருகின்ற புத்தாண்டு அனைவருக்கும் நல்ல நாளாக அமையும் வளமான மகிழ்ச்சியான நாளாக தொடரும் இனி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இந்த நாளை கொண்டாட வேண்டுமென ஒருவருக்கொருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.
என்றும் அன்புடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்
எஸ்.கே.பி.சி.


More Stories
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா
SRM School of Law Adds 35 New Faculty Members in a Major Push towards Internationalisation
SRM Institute of Science and Technology Organized International Conference on Human Capital Management