சென்னை, ஜனவரி 11, 2026 – பி. எஸ். அப்துர் ரஹ்மான்கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தனது15வது பட்டமளிப்பு விழாவை இன்று தனது வளாகத்தில்நடத்தியது. இந்த பட்டமளிப்பு விழாவில், 65 முனைவர்பட்டதாரிகள், 774 முதுகலை பட்டதாரிகள் மற்றும் 2152 இளங்கலை பட்டதாரிகள் உட்பட மொத்தம் 2991 பேர்தங்களது பட்டங்களைப் பெற்றனர்.
உயர்ந்த தரவரிசைகளைப் பெற்ற 63 மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன; இவர்களில் 38 மாணவர்கள்இளங்கலை பட்டதாரிகள் மற்றும் 25 மாணவர்கள் முதுகலைபட்டதாரிகள் ஆவர். இந்த பட்டமளிப்பு விழாவில், 759 மாணவர்கள் நேரடியாகவும், 2232 மாணவர்கள்இணையவழியிலும் கலந்துகொண்டு பட்டங்களைப் பெற்றனர். தமிழக அரசின் உயர்கல்வித் துறை மாண்புமிகு அமைச்சர்டாக்டர் கோவி. செழியன் மாணவர்களுக்குப் பட்டங்களைவழங்கினார். கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன்லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் டாக்டர் ஜின்னாரஃபிக் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுசிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில், பிஎஸ்ஏசிஐஎஸ்டி-யின் வேந்தர் திருமதி குர்ரத்ஜமீலா, இணை வேந்தர் திரு. அப்துல் காதிர் ஏ. ரஹ்மான் புகாரி, பொறுப்புத் துணைவேந்தர் டாக்டர் ஏ. பீர் முகமது, இணைத்துணைவேந்தர் உள்ளிட்ட பிரமுகர்களும் உடனிருந்தனர்.
டாக்டர். என். தாஜுதீன், பதிவாளர் டாக்டர். என். ராஜாஹுசைன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டாளர் டாக்டர். எஸ். காஜா மொஹிதீன்,
டாக்டர் கோவி. மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்செழியன் அவர்கள் தனது உரையில் பட்டம் பெற்றபட்டதாரிகளை வாழ்த்திப் பேசினார்.
தலைமை விருந்தினர் உரை: “தலைமை தாங்குவது என்பதுஅரசியலுக்கு மட்டுமல்ல;
அது தொழில்துறைக்கும் பொருந்தும் என்பதற்கான
உயரிய எடுத்துக்காட்டாக விளங்குபவர்
டாக்டர் ஜின்னா ரஃபிக் அகமது,
எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன் –
கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்.”
அவரைத் தொடர்ந்து, டாக்டர் பி.எஸ். அப்துர் ரஹ்மான்அவர்களின் பிள்ளைகள், அவரின் உயரிய நோக்கமான கல்வி,
முக்கியமாக பெண் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை
உறுதியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.“பெண் விடுதலைக்குபாடுபட்ட அனைத்து தலைவர்களும்பெருமைப்படும் வகையில், கிரசன்ட் இன்று அந்த கனவை நிஜமாக்கி வருகிறது.”இந்தஉயரிய நோக்கம்,
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின்
கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான
தொலைநோக்குச் சிந்தனையுடன்
முழுமையாக ஒத்திசைந்து நிற்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி கூறுவது போல,“எனக்கு இரண்டு கண்கள் — கல்வியும் மருத்துவமும்.”இன்று,இந்தியாவில் அதிகமாக கல்வி பெற்ற மாநிலம் எது?என்ற கேள்விக்கு தமிழ்நாடு என்ற பதிலை நாம் பெருமையுடன்கூற முடிகிறது.இந்த இலக்கை எட்டியதற்குக்காரணம்,கிரசன்ட் பல்கலைக்கழகம் போன்ற கல்விநிறுவனங்ள் உருவாக்கும்தகுதியான பட்டதாரிகளே.“ஒரு தனிமரம் தோப்பாகாது;பலர் இணைந்தால்தான் ஒரு நாடுஉருவாகும்.”இன்று பட்டதாரிகளாக நிற்கும் நீங்கள்,இதுவரை மாணவர்கள்;இன்றுமுதல் —
பொறுப்புணர்வுள்ள சமூகத்தின் அடையாளங்கள்.”


More Stories
SRMIST Launches AI-Powered Talent Acquisition Agent with Prayag.ai
Aligned with NEP and Atmanirbhar Bharat, KCG College of Technology Unveils AICTE
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 350 மாணவர்கள் ஐ.டி. மற்றும் சைபர் பாதுகாப்பு டிப்ளோமாவில் பட்டம் பெற்றனர்