
காட்டாங்குளத்தூர், 13 ஜனவரி 2026:
காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (SRMIST), ‘வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தொழில் பிரிவில் மேம்பட்ட திறன் மற்றும் தொழில் உருவாக்க மையத்தை தொடங்கியிருக்கிறது. தொழில்துறை ஆதரவு பெற்ற இந்த முன்னெடுப்பு ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் பங்களிப்போடு மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு மாநிலத்தில் மூன்றாவது திறன் உருவாக்க மையமாகவும், சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் (EEE) ஆகிய துறைகளை உள்ளடக்கிய மாநிலத்தின் முதல் பல்துறை மையமாகவும் தொடங்கப்பட்டிருப்பது இத்துறையில் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையை குறிக்கிறது.

இந்நிகழ்வில் பேசிய எஸ்.ஆர்.எம். பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் சி. முத்தமிழ்ச்செல்வன், “கல்விசார் கற்றலுக்கும் உண்மையான தொழில்முறைத் தேவைகளுக்கும் இடையே பாலமாக இம்மையம் செயல்படும். உலகளாவிய தொழில்நுட்பம் சார்ந்த பணிச்சூழலில் சிறந்து விளங்க எங்கள் பல்கலையின் மாணவர்களை இது தயார்படுத்தும்,” என்று கூறினார்.
இத்தொடக்க விழாவில் ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளான திரு. அகிலேஷ் சாஹி (தலைவர் – AEX India), திரு. அருண்குமார் (முதுநிலை ஈடுபாட்டு கல்வி மேலாளர்), திரு. ராகவேந்திர ஜெயமங்கல் (வாடிக்கையாளர் வெற்றி பிரிவின் மேலாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் எஸ்.ஆர்.எம். பொறியியல் மற்றும் தொழில்நுட்பப்புலத்தின் டீன் டாக்டர் லீனஸ் ஜேசு மார்ட்டின் மற்றும் சிவில், மெக்கானிக்கல் மற்றும் EEE துறைத் தலைவர்களும் பங்கேற்றனர்.
புதிதாக நிறுவப்பட்டிருக்கும் இந்த மையத்தின் மூலம், மாணவர்கள் ஆட்டோடெஸ்கின் மேம்பட்ட கிளவுட் அடிப்படையிலான தளங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். மேலும் தகவல் மாதிரியை கட்டமைப்பது (BIM), டிஜிட்டல் உற்பத்தி செயல்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வடிவமைப்பு ஆகியவற்றில் நேரடி செய்முறை பயிற்சியும் மாணவர்களுக்கு இங்கு வழங்கப்படும். இம்முயற்சியின் மூலம் சிவில்,மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஊடக அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த சுமார் 2,000 மாணவர்கள் ஆண்டுதோறும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திறனளிப்பு, திறனை உயர்த்துதல் மற்றும் மறுதிறன் அளித்தல் ஆகிய முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், ஆண்டுக்கு சுமார் 100 பேராசிரியர்கள் சான்றளிக்கப்பட்ட முதன்மைப் பயிற்சியாளர்களாக ஆவதற்கான பயிற்சியையும், திறனையும் பெறுவார்கள்.
இந்தக் கூட்டு நடவடிக்கையின் நோக்கம் குறித்து ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், “எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்துடனான இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிநவீன கருவிகள், சாதனங்கள் மற்றும் தொழில்துறைக்கு தேவையான பணிகளில் நிபுணத்துவத்தை வழங்க எங்களுக்கு உதவுகிறது,” என்றார்.
உள்கட்டமைப்பு மட்டுமின்றி, பாடத்திட்டத்தை செழுமைப்படுத்துதல், ஆசிரியர்களின் திறன் மேம்பாடு மற்றும் ஆழ்ந்த தொழில்முறை கற்றல் ஆகிய திட்டங்களிலும் இந்த கூட்டுவகிப்பு திட்டம் முக்கிய கவனம் செலுத்தும். இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையின் தேவைகளை திறம்பட பூர்த்திசெய்யும் திறமைசாலிகளாக மாற மாணவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்.
வடிவமைப்பு மற்றும் உருவாக்கத் துறைக்கான இந்த மையம், தொழில்நுட்பத்தோடு ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி, புதுமையான கண்டுபிடிப்புகளையும், அனுபவ ரீதியிலான கற்றலையும் ஊக்குவிப்பது மற்றும் மாணவர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவது ஆகிய குறிக்கோள்கள் மீது எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
image.jpeg
படம் 1: வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறைக்கான மேம்பட்ட திறன் உருவாக்க மையத்தின் தொடக்க விழாவில், ஆட்டோடெஸ்க் (AEX India) தலைவர் திரு. அகிலேஷ் சாஹி மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் C. முத்தமிழ்ச்செல்வன்.
image.jpeg
படம் 2: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் மேம்பட்ட திறன் உருவாக்க மையத்தை தொடங்கி வைத்தபோது (இடமிருந்து): டாக்டர் லீனஸ் ஜேசுமார்ட்டின் (டீன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப்புலம், எஸ்.ஆர்.எம்.), டாக்டர் சி. முத்தமிழ்ச்செல்வன் (துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்.), திரு. அகிலேஷ் சாஹி (தலைவர் – AEX India, ஆட்டோடெஸ்க்) மற்றும் திரு. அருண்குமார் (முதுநிலை என்கேஜ்மென்ட் எஜுகேஷன் மேலாளர்,ஆட்டோடெஸ்க்).
image.jpeg
படம் 3: (இடமிருந்து வலம்) டாக்டர் பவித்ரா சந்திரமெளலி (உதவிப் பேராசிரியர், சிவில் துறை), டாக்டர் வி.ஆர். பிரசாத் குமார் (இணைப் பேராசிரியர், சிவில் துறை), டாக்டர் கார்த்திகேயன் டி (இணைப் பேராசிரியர், EEE துறை), திரு. ராகவேந்திர ஜெயமங்கல் (வாடிக்கையாளர் வெற்றி மேலாளர், ஆட்டோடெஸ்க்), திரு. அருண்குமார் (சீனியர் என்கேஜ்மெண்ட் எஜுகேஷன் மேலாளர், ஆட்டோடெஸ்க்), திரு. அகிலேஷ் சாஹி (தலைவர் – AEX India, ஆட்டோடெஸ்க்), டாக்டர் சி. முத்தமிழ்ச்செல்வன் (துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்.), டாக்டர் லீனஸ் ஜேசுமார்ட்டின் (டீன், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப்புலம், எஸ்.ஆர்.எம்.), டாக்டர் பி.டி. ரவிச்சந்திரன் (தலைவர், சிவில் துறை, எஸ்.ஆர்.எம்.),டாக்டர் விஜயகுமார் கே (தலைவர், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பள்ளி, எஸ்.ஆர்.எம்.), டாக்டர் சேரலாதன் எம் (தலைவர், மெக்கானிக்கல் பொறியியல் பள்ளி, எஸ்.ஆர்.எம்.), டாக்டர் சுரேஷ் குமார் கே (மெக்கானிக்கல் பொறியியல் துறை, தலைவர், எஸ்.ஆர்.எம்.), டாக்டர் ஆர். ஸ்ரீதர் (எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் துறை, தலைவர், எஸ்.ஆர்.எம்.).


More Stories
Vidhya Seva Samman 2026 Honours 10 Outstanding Teachers of Chennai with ₹50,000 Prize and Citation of Honour
Vidhya Seva Samman 2026 Honours 10 Outstanding Teachers of Chennai with ₹50,000 Prize and Citation of Honour
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா