சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழா என்பது,ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை மாநகரில், ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த மயிலாப்பூர் பகுதியின் மையமாக அமைந்திருக்கும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றி நடைபெறும் ஒரு கலாச்சார நிகழ்வாகும். இந்த விழா பாரம்பரியமாக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் அமைந்துள்ள நவராத்திரி மண்டபத்தில் காலை நேர இசைக் கச்சேரியுடன் தொடங்குகிறது.
பின்னர், கபாலீஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள திறந்தவெளிகள், வீதிகள் மற்றும் பள்ளிகள் போன்ற தனிப்பட்ட அமைவிடங்களில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளாக இது விரிவடைகிறது.
சென்னையில் உள்ள பல்வேறு இசைப்பள்ளிகளைச் சேர்ந்த, வளர்ந்து வரும் இளம் கலைஞர்கள் இந்த கச்சேரிகளில் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். அவர்களை அறிமுகம் செய்யும் ஒரு மேடையாகவும் இவ்விழா திகழ்கிறது.
பாரம்பரியத் தெரு விழாக்கள் மற்றும் கச்சேரிகள் போன்ற செவ்வியல் கலை (classical arts) நிகழ்வுகளின் இந்தகலவையானது, மயிலாப்பூரை சென்னையின் கலாச்சார மையமாக முன்னிறுத்துவதோடு, பாரம்பரியத்தை சமூகமாக ஒருங்கிணைந்து, முன்னிலைப்படுத்தும் ஆர்வத்தோடும், உணர்வோடும் இணைக்கிறது.
2026-ம் ஆண்டு நடைபெறும் 22-வது சுந்தரம் ஃபைனான்ஸ் மயிலாப்பூர் திருவிழாவின் சிறப்பம்சங்கள்: நாள் 1: திருமதி.மீனாட்சி சீனிவாசன் அவர்களின் மாணவர்கள் பங்கேற்றனர்;நாள் 2: சேலம் டாக்டர் காயத்ரி வெங்கடேசன் அவர்களின் மாணவர்கள் பங்கேற்ற கச்சேரி நடைபெற்றது; நாள் 3:திருவையாறு பி. சேகர் அவர்களின் கீழ் இசைப்பயிற்சி பெறும் ‘மஹதி அகாடமி’ மாணவர்களின் வாய்ப்பாட்டுக் கச்சேரி மற்றும் பிரபல மாண்டலின் நிபுணரான ஸ்ரீ U. ராஜேஷ் அவர்களின் மாணவர் மாஸ்டர் சமர்த் ஸ்ரீகுமார் அவர்களின் மாண்டலின்இசைக் கச்சேரி நடைபெற்றது. இத்திருவிழாவின் இறுதி நாளில், ஸ்ருதிலயா இசைப்பள்ளியைச் சேர்ந்த ஆர். சுரேஷ் அவர்களின் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்திய பல்வேறு வாத்தியங்களின் ஒருங்கிணைந்த இசை கச்சேரி நடைபெற்றது.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య