தைத்திருநாளை முன்னிட்டு சென்னை சூலையில் உள்ள Sri Kanyaka Parameswari Devasthanam & Charities நிறுவன வளாகத்தில் மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் தை பொங்கல் விழா பள்ளியின் தாளாளர் டி வி ராம குமார் தலைமையில் நடைபெற்றது.
தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலை பள்ளியில் மாபெரும் தைப்பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மயிலாட்டம் கிராமிய நடனம் புலியாட்டம் தப்பாட்டம் குறவன் குறத்தி நடனம் கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியது.
இந்த மாபெரும் பொங்கல் விழாவில் பள்ளியின் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று ஆரவாரத்துடன் மகிழ்ச்சியை கொண்டாடினர் இந்த நாளில் அனைவரும் ஜாதி மதம் மொழி இனம் வேறுபாடு இன்றி ஒரு தாய் பிள்ளைகளாக தைத்திருநாள் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும் இந்த மாபெரும் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி மகளிர் கல்லூரியின் தாளாளர் சின்னி பாலாஜி கலந்து கொண்டு இந்த பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் பள்ளியின் முதல்வர் சுப்ரமணியம் துணை முதல்வர் கவிதா பள்ளியின் மேனேஜர் ஏ ஸ்ரீலதா வி சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


More Stories
Vidhya Seva Samman 2026 Honours 10 Outstanding Teachers of Chennai with ₹50,000 Prize and Citation of Honour
Vidhya Seva Samman 2026 Honours 10 Outstanding Teachers of Chennai with ₹50,000 Prize and Citation of Honour
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா