March 7, 2026

தி.நகரில் செயல்பட்டு வரும் R J R ஹெர்பல் மருத்துவமனை தாக்குதல்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் R J R ஹெர்பல் மருத்துவமனையின்கிளை மேலாளர் செல்வம் அவர்கள் செய்தியாளர்களிடம்கூறுகையில்,

சென்னை தி. நகரில் உள்ள R J R ஹெர்பல் மருத்து வமனையை 13.01.2026 மாலை 6.30 அளவில் சிவசாமி வேலுமணி என்பவர் 30குண்டர்களுடன் மருத்துவமணைக்குவந்து என்னிடமும், சகப்பெண் ஊழியர்களிடமும் உங்கள்முதலாளிS.R. ஜெயதுரை எங்கே என்று கேட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . பின்னர் வெளியே சென்று கார் கண்ணாடிகளை உடைத்து சென்றனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் மருத்துவமனையின் மேலாளர் புகார் அளித்ததின் பேரில் காவலர்கள் வந்து விசாரணை செய்து 5 நபர்களை அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக முதல் தகவல்அறிக்கையைபதிவு செய்து. அவர்களை கைது செய்யாமல் வெளியே அனுப்பி விட்டனர் .

எனவே எங்களுக்கு அவர்களால் பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சம் உள்ளது. ஆகையால் காவல்துறை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த செய்தியாளர் சந்திப்பு மூலம் தெரிவித்தார்.

About Author