மக்கள் போற்றும் மாபெரும் தலைவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா மக்கள் சேவை கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சேவை கழகத்தின் தலைவர் ஜி எம் ஜோதிராஜ் அவர்கள் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்
மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் சேவை கழகத்தின் பொதுச் செயலாளர் ப விஜயகுமார் முன்னிலை வகித்தார்
மேலும் அதனைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மக்கள் சேவை கழகத்தின் தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய தலைவர் ஜி எம் ஜோதிராஜ் அவர்கள் கூறியது மக்கள் போற்றும் மாபெரும் தலைவர் கொடை வள்ளல் என்று போற்றப்படும் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஒரு மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் சேவை கழகத்தின் இணை செயலாளர் சதாசிவம் மருத்துவ அணியை சார்ந்த லட்சுமி ரகுராம் சிவக்குமார் கார்த்திக் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య