சென்னை எழும்பூர் ராஐ ரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில்
வீரபத்திரர் ராஜகுல பேரவை சார்பாக வண்ணார் சமுதாத்திற்கு 5% உள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
பேரவை நிறுவனத் தலைவர் பொறியாளர் தா .வசந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வண்ணார் சமூகத்தினருக்கு 5% உள் இட பங்கீடு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கும் வண்ணார் சமூகத்திற்கு கல்வி,பொருளாதாரம் , வேலை வாய்ப்பிலும் பலன்கள் சென்றடைவதில்லை. 80 இலட்சம் பேருக்கும் அதிகமாக உள்ள எங்கள் சமூகத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்க கோரியும், அரசு பதிவேட்டில் உள்ள வண்ணார் என்ற பதத்தை நீக்கி ராஜகுலத்தோர் என்று சட்டம் இயற்றி அரசு பதிவேட்டில் வெளியிட கோரியும், எங்கள் சமூகத்திற்கு என்று சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்றங்களில் அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதில் எங்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்,தனித் தொகுதிகள் வழங்க வேண்டும்.
வண்ணார் சமூகத்திற்கு சொந்தமான நிலங்கள், கோயில்கள், மடங்கள் போன்ற ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி உள்ள இடங்களை மீட்டு எங்கள் சமூகத்திடம் ஒப்படைக்க ஆவண செய்ய கோரியும் சமூகத்தை மேம்படுத்த தனி நல வாரியம் ஒன்றினை அமைக்க வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
மேலும் இந்த ஆர்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் மேனாகுமார், பொருளாளர் கே .எஸ் .சுப்புராஜ், தென் சென்னை மாவட்ட செயலாளர் தண்டபாணி, அரியலூர் மாவட்டச் செயலாளர் அண்ணாதுரை, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தங்கராஜ் , கடலூர் மாவட்டச்செயலாளர் பழனி, மகளிரணியின் சென்னை உஷா, அரியலூர் மஞ்சு மற்றும் பஞ்சாட்சரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை வெற்றியடையச் செய்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.