சென்னையில் ஒரு ஓவிய சங்கமம் 2026, stall 41 (Wings Convention Center) ,
சென்னை ஷெனாய் நகர் விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் உலகத்தரம் வாய்ந்த ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை விழா. 22 .02 .2026 அன்று நடைபெற்றது
ஓவியர் செல்வி ஆருத்திரா முரளிதரன்,
ஓவியக்கலையில் பள்ளிப்பருவம் முதலே ஆர்வமும் பயிற்சியும் முயற்சியும் கொண்டவர். காலை படைப்புகளில் தீராத ஆர்வமுள்ளவர்.

இதையே தொழிலாக கொள்ளும் நோக்கில் பள்ளி கல்வி முடிக்கும் முன்னே, சென்னை கலாக்ஷேத்ராவில் – நுண்கலையியல் படித்தவர்.
மேலும் அரசு நுண்கலையியல் கல்லூரியில் ஓவியத்தில் இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி அடைந்தவர்.
கலை என்பது ஒரு பயிற்சி மட்டுமல்ல – அது ஒரு வாழ்க்கை முறை என்று தீவிரமாக நம்புகிறார்.
இருபது வருடங்களுக்கும் மேலாக பென்சில் ஓவியம், மற்றும் ரியலிசத்தை ஓவியங்களில் கொண்டு வருவதில் ஆழ்ந்த அறிவும் திறமையும் கொண்டவர்
தற்போதய நவீன செயற்கை நுண்ணறிவு சார்ந்த உலகத்தில், கைவினை ஆற்றலையும், ஆழ்ந்த உணர்வுகளையும், இக்கலையின் எல்லை இல்லா வெளிப்பாடுகளையும் தன் திறமையால் நிஜமாக்குபவர்.
மனிதனால் உருவாக்கப்பட்ட இக்கலையின் காலங்கடந்த அழகைக் கொண்டாடுகிறார்.
விலைமதிப்பற்ற இவரின் தனித்துவமான படைப்புகள் இருக்கும் இடங்களின் மதிப்பு பலமடங்கு கூடுவது திண்ணம்.
ஓவியா தன்னிடம் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளது அனைத்தையும் கைகளால் மட்டுமே வரைந்து உள்ளேன் டிஜிட்டல் எந்த வகையிலும் உபயோகப்படுத்தவில்லை ரியலிசத்தை வெளிப்படுத்துவதே என் படைப்பாகும் என்றும் அஜந்தா குகையில் ஒரு ஓவியம் சிதிலம் அடைந்து இருந்தது அதை என் ஓவியத்தில் முழு உருவமாக கொண்டு வந்துள்ளேன் என் தாத்தாவிடம் ஒரு காலண்டர் ஓவியம் இருந்தது அதையும் என் கை பக்குவத்தில் வரைந்து முடித்தேன் மேலும் என்னிடம் கதக்களி,மயில் போன்ற ரியலிசத்தை வெளிக்கொண்டுவரும் ஓவியங்கள் உள்ளதாக தெரிவித்தார்
தொடர்புக்கு – arudhramurali@gmail.com
கைபேசி – +91-6381873985


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య