சென்னை,
ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அளவில் நிலை இரண்டு மாதங்களாக தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து தென்னக ரயில்வே துறையின் சதர்ன்ரயில்வே மத்தூர் யூனியன் சென்னை கோட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில்50-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் கலந்துகொண்டு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அளவை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
இதன் தொடர்ச்சியாக சதன் ரயில்வே மத்தூர் யூனியன் அகில இந்திய பொதுச் செயலாளர் கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
ரயில்வே தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக ஈட்டிய அலவன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மருத்துவபணிப்படி, அபாயமற்றும் கடினப்பணிபடி உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.
8 ஆவது சம்பள கமிஷன் தனியார் நிறுவனம்மூலம் ரயில்வே துறை நடத்த திட்டமிட்டு இருந்தன, முதன்மை அலுவலர்கள் மாறாக இடைநிலைஉயர் அலுவலர்களை தனியார் நிறுவனங்களில் பணியமரித்து முயன்றனர்,எங்கள்முயற்சியால் அதனை தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் சென்னை எழும்பூர் -செங்கல்பட்டு இடையே புறநகர்ரயில் சேவை எழும்பூர்ரயில் சீரமைப்புபணி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது,
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வேதுறை பொருட்படுத்தவில்லை
03.03.26முதல் புறநகர்ரயில் சேவை12 பெட்டிகளுடன் கூடுதலாக 3பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் என்றவகையில் இயக்கப்படும். மேலும் எழும்பூர் ரயில்11நடைமேடைவிரைவில் மக்கள்பயன் பாட்டிற்கு வர உள்ளது.
நீண்ட நாட்கள் கிடப்பில் இருந்தபரங்கிமலை-சென்னை கடற்கரை இடையேயான புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி வழியாக உயர்மட்ட ரயில் பாதையின் சேவை மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஒன்றியபட்ஜெட்டில்தென்னக ரயில்வே துறைக்கு ரூ.16ஆயிரம்கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில்ரூ.13,600கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது, பின்னர் ரூ400கோடி குறைக்கப்பட்டு ரூ13,200கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் காரணத்திற்காக மட்டுமே தென்னக ரயில்வே துறைக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
வடஇந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தொழிலாளர்கள் பலர் தென்னக ரயில்வேயில் பணியில் இருப்பதன் மூலமாக தமிழர்கள் சந்தித்து வரும் சிரமங்கள் குறித்து முதலமைச்சரை நேரில்சந்தித்து வலியுறுத்தினோம், அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம்மூலமாக ரயில்வே தேர்வுக்கு பயிற்சியை தமிழ்நாடு இளைஞர்களுக்கு வழங்கிவருகிறார் என தெரிவித்தார்..


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
சென்னையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஓவியர் – “ஆருத்திரா”