உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள சங்கீதா பெண்கள் விடுதியில் 8/ 3 2026 அன்று சர்வதேச மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது இந்த மாபெரும் மகளிர் தின விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சிஐடியு மாநில துணைத்தலைவர் தோழர் பா பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு மகளிர் தின உரை நிகழ்த்தி அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் பொழுது உரிமையாளர் சங்கீதா வடிவேலு அவர்கள் கேக் வெட்டி அனைத்து பிள்ளைகளோடு பகிர்ந்து கொண்டார் அதன் பிறகு அனைவரும் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஆடல் பாடலுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியானது 8 மணியிலிருந்து பத்து மணி வரை நடைபெற்றது இதில் சிறப்பாக நடனமாடிய சங்கீதா மற்றும் நிரஞ்சனா ஆகியோர் முதல் பரிசை பெற்றனர் அனுஷ்கா இரண்டாவது பரிசையும் ஆர்த்தி மூன்றாவது பரிசையும் பெற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்கீதா பெண்கள் விடுதியின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மகளிர் திரளாக கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?