Chennai: தியாகராய நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் ஆவின் மகளிர் நலச்சங்கத்தின் 24 ஆம் ஆண்டு மகளிர் தின விழா தமிழ் தாய் வாழ்த்துடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாபெரும் மகளிர் தின விழாவிற்கு DGM Finance திருமதி வனிதா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் விழாவில் ஆவின் நிர்வாக இயக்குநர் திரு A ஜான் லூயிஸ் I A S தலைமை உரையாற்றினார். ஆவின் மகளிர் நலச்சங்கத்தின் செயல்பாடுகளை மிகவும் பாராட்டினார். குறிப்பாக சங்கத்தலைவர் சிவகாமசுந்தரி பணிஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் சமுதாயப்பணிகளை முழு ஈடுபாடுடன் செய்வது மிகவும் வியப்பாக உள்ளது எனப் பாராட்டினார் நிகழ்ச்சியில் D G P திரு ராஜீவ் குமார் I P S அவர்களும் ஆவின் இணை நிர்வாக இயக்குநர் திருமதி S கவிதா I A S அவர்களும் கலந்து கொண்டனர்.

விஸ்ராந்தி முதியோர் இல்லத்
திற்கு 75000 க்கு காசோலையும் மூதாட்டிகளுக்கு பிளாஸ்களும் ஞான தர்ஷனில் வசிக்கும் கண்களை இழந்த கண்மணிகளுக்கு ஆவின் பாலட்டை பெறுவதற்கு 60000 க்கு காசோலையும் 40 சுடிதார்களும் சால்வேஷன் டிரஸ்டில்வசிக்கும் ஏழைப் பெண்களுக்கு 25000 மதிப்புள்ள 50 புடவைகளும சிறுவர்களுக்கு 10000 மதிப்புள்ள கல்வி உபகரணங்களும் ஆவின் மகளிர் நலச்சங்கத்தின் சார்பில்ஆவின் MD J M D and DGP / CVO ஆகியோரின் பொற்கர்ங்களினால் வழங்கப்பட்டது.மற்றும. ஆவினில் பணிபுரியும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நூற்றுக்கணக்கான பரிசுக் கோப்கைகளும் விருதுகளும் வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக இந்து கல்லூரி பேராசிரியர் திருமதி திரிபுர சூடாமணி அவர்கள் பெண்களின் பெருமையைப்பற்றியும் ஆவின் மகளிரிர் சங்க சேவைகளைப்பற்றியும் பாராட்டிப்பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு ஆவின் பணிகளுக்கு இடையூறு இன்றி உறுதுணையாக இருந்து கலை நிகழ்ச்சிகளுக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் மாலினி அம்பத்தூர் பால் உப பொருட்கள் பண்ணை கவிதா அம்பத்தூர் பண்ணை தீப சௌந்தரி சோழிங்கநல்லூர் பண்ணை காவ்யா விற்பனைப்பிரிவு பிரியா மத்தியப்பண்ணை காயத்திரி மத்தியப்பால்பண்ணை துணைப்பொதுமேலாளர் ஆகியோருக்கு D G P திரு ராஜிவ் குமார் அவர்களின் பொற்கரங்களினால் விருதுகள் வழங்கப்பட்டது.சிறந்த சேவை செய்த செயற்குழு உறுப்பினர்களுக்கும் போட்டிகளின் நடுவர்களுக்கும் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட விருதுகள் வழ்ங்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வெள்ளி விழா சிறப்பாக நடைபெற சேமிப்பு உண்டியலகள் சிலருக்கு ஆவின் MD திரு ஜான் லூயிஸ் I AS அவர்களும் DGp திரு ராஜிவ்குமார் I P S அவர்களும் வழங்கினர் JMD திருமதி S கவிதா I A S 1000 அளித்து வெள்ளி விழா சேமிப்பு உண்டியலை பெற்றுக் கொண்டதற்கு சங்கத்தலைவர் நன்றி கூறினார் நிகழ்ச்சியில் திரு k அன்புமணி G M F அவர்களும் கலந்து கொண்டார்.நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. திருமதி வனிதா D G M Finance வரவேற்புரை நல்கியதுடன் அனைத்து மகளிரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சிமுடியும் வரை அமர்ந்திருந்து விழாவிற்கு முழு ஒத்துழைப்பு நல்கியதற்கு சங்கத்தலைவர் சிவகாமசுந்தரி தன் நன்றியை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சிக்கு ஆவின் மகளிர் நலச்சங்க தலைவர் சிவகாமசுந்தரி அவர்களுடன் துணைத்தலைவர் மாணிக்கவல்லி செயலாளர் கல்பனா பொருளாளர் ரேவதி இணைப்பொருளாளர் பிரசில்லா இணைச்செயலாளர்கள் தாட்சாயணி சுஜீதா. செல்வராணி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தீப சௌந்தரி. சுசீலா சிவகாமி அர்ச்சனா ஈஸ்வரி ஹேமாவதி சதுர்த்தி ஷர்மிளா ராஜஶ்ரீ ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர்


More Stories
நாடு முழுவதும் மகளிர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Rotary Club of Chennai Legends and Rotary District 3234 Donate 225 Sewing Machines to Women
Women’s Day Walkathon 2K26 Concludes Successfully in Chennai