Chennai: 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தனியார் நிறுவனம் மூலம் செல்ல கூடிய ஹாஜி களுக்கு ஹஜ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஹமீதியா ஹஜ் சர்வீஸ் சார்பில் சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஹமீதியா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் அல்ஹாஜ் M. S.ஷஃபி முகமது அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில்
ஹஜ்ஜின் முன் தயாரிப்புகள் மற்றும் ஹஜ்ஜின் செயல்முறை விளக்கம் மற்றும் மக்கா, மதீனாவில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மெளலானா மெளலவி அல்ஹாபிழ் முஹைதீன் அப்துல் காதர் ரப்பானி மற்றும் மெளலான மெளலவி அல்ஹாபிழ் அப்துல் ஜப்பார் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தலைசிறந்த உலமாக்களும் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஹாஜிகளும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஹமீதியா ஹஜ் சர்வீஸ் மூலம் ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து அதிக ஹாஜிகளை ஹமீதியா ஹஜ் சர்விஸ் நிறுவனம் மிகச் சிறப்பான முறையில் ஹாஜிக்களை வழிநடத்தி அழைத்துச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
2027 ஆண்டுக்கான உம்ரா மற்றும் ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகள் இப்போது துவங்க இருகிறது என்பது குறிபிடத்தக்கது. எனவே புனித ஹஜ் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட மேற்கொள்கிறது ஹமீதியா ஹஜ் நிறுவனம் மருத்துவ வசதி வசதிக்கேற்ப தங்கும் விடுதி உணவு உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் எடுத்துரைத்தனர்
மேலும் இந்நிகழ்ச்சியை மௌலானா மௌலவி A. ஹஜ்ஜி முஹம்மது நிஜாமி ரஷாதி தொகுத்து வழங்கினார். ஹமீதியா ஹஜ் சர்வீஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹஜ் புனித பயணத்திற்கு ஹாஜிக்களை அழைத்துச் செல்கிறது இந்நிறுவனத்தில் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ வசதி தரமான உணவு மற்றும் தங்குமிடம் மற்றும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் வழிகாட்டுவோர் என அனைத்து வசதிகளையும் திறம்பட மேற்கொள்கிறது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் ஹாஜிக்களுக்கு மிக எளிதாக அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது. இந்த மிகப்பெரும் பாக்கியத்தை வழங்கிய ஹமீதியா ஹஜ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு அறுசுவை உணவு வழங்கப்பட்டது


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai