2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் ஹாஜிக்கள் ஹமீதியா ஹஜ் சர்வீஸ் சார்பில் சென்னை மற்றும் கொச்சினில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர் ஐந்து விமானங்கள் மூலம் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் 350 க்கும் மேற்பட்டோர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர்
இந்த நிகழ்விற்கு ஹமீதியா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் அல்ஹாஜ் M. S.ஷஃபி முகமது அவர்கள் தலைமை தாங்கினர் ஹமீதியா ஹஜ் சர்வீஸ் மூலம் ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து அதிக ஹாஜிகளை ஹமீதியா ஹஜ் சர்விஸ் நிறுவனம் மிகச் சிறப்பான முறையில் வழிநடத்தி அழைத்துச் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai :ஹமீதியா ஹஜ் சர்வீஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஹஜ் புனித பயணத்திற்கு ஹாஜிக்களை அழைத்துச் செல்கிறது இந்நிறுவனத்தில் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ வசதி தரமான உணவு மற்றும் தங்குமிடம் மற்றும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் வழிகாட்டுவோர் என அனைத்து வசதிகளையும் திறம்பட மேற்கொள்கிறது ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் ஹாஜிக்களுக்கு மிக எளிதாக அவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கங்கள் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகிறது. ஹமீதியா சர்வீஸ் இமாம் மௌலவி A. ஹஜ்ஜி முஹம்மது நிஜாமி ரஷாதி அவர்கள் செய்தியாளரிடம் இன்று முதற்கட்டமாக சென்னையில் இருந்து ஹாஜிக்கள் சொகுசு பேருந்து மூலம் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து நேரடி சாவுதியா விமானம் மூலம் மக்கா செல்கின்றனர். மற்றும் 17, 18,19, 20 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் கொச்சியிலிருந்து 350 க்கும் மேற்பட்ட ஹாஜிகள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இப்பயணத்தை ஹமீதியா சர்வீஸ் நிறுவனம் மிக சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் ,சிறப்பான விருந்தோம்பல் மற்றும் ஹஜ்ஜை பூர்த்தி செய்யக்கூடிய வரைமுறைகளை எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?