சென்னை, ஜூலை 27, 2026 – சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை, வாடிக்கையாளர்களுக்கு 25 ஆண்டுகாலமாக சிறப்பான சேவையைத் தொடர்ந்து வழங்கியதை பெருமிதத்துடன் நிறைவு செய்திருக்கிறது. இதன் மூலம் தனது பயணத்தில் வெற்றிகரமாக ஒரு அர்த்தமுள்ள மைல்கல்லை இந்நிறுவனம் எட்டியிருக்கிறது.
25 ஆண்டுகள் நிறைவு என்ற வெறும் கொண்டாட்டமாக இல்லாமல், வாடிக்கையாளர்களுடனான நீடித்த கூட்டாண்மை, பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளையின் பாரம்பரியத்தை வடிவமைத்த அவர்களது குடும்பத்தினரின் ஆதரவு ஆகியவற்றை அங்கீகரித்து, நன்றியுணர்வோடு கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக இன்றைய கொண்டாட்டம் அமைந்தது.
“சுந்தரம் ஃபைனான்ஸில், எங்களுக்கு நிலைப்புத்தன்மையையும், உத்வேகத்தையும் வழங்குவது வெறுமனே நீண்ட பல ஆண்டுகளாக செயல்படுவது மட்டுமல்ல; மக்களுடனான எங்கள் உறவை வரையறுக்கும் உண்மை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மையே எங்களுக்கு அர்ப்பணிப்பையும், சிறப்பான சேவையாற்றும் உத்வேகத்தையும் வழங்குகிறது. சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளையானது, அது கடைபிடிக்கும் விழுமியங்களாலும் மற்றும் அது சேவை வழங்கி வரும் சமூக மக்களின் நம்பிக்கையாலும், விசுவாசத்தாலும் வலுவாக நீடித்து நிலைத்திருக்கிறது” என்றார் சுந்தரம் ஃபைனான்ஸின் தமிழ்நாடு பிராந்தியத்தின் தலைவரும், நிறுவனத்தின் முதுநிலை துணைத் தலைவருமான திரு. ராஜேஷ் வெங்கட்.
“1993-ல் நிறுவப்பட்ட சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை, சென்னையில் நிதிச் சேவைகளை மக்கள் எளிதாகப் பெறுமாறு கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளது. பெரும்பாலும் பிரதான நிதி நிறுவனங்களின் சேவைக்கு அப்பாற்பட்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு முக்கியமாக சேவையாற்றி வந்திருக்கிறது. சிறு வணிக உரிமையாளர்கள், முதல் முறை கடன் பெறுவோர், சுயதொழில் வல்லுநர்கள் மற்றும் போக்குவரத்து வாகன நிறுவன உரிமையாளர்கள் என பல தரப்பினரும் நம்பகமான நிதி கூட்டாளியாக இந்தக் கிளையை கருதுகின்றனர் மற்றும் இதன் நிதி சேவைகளின் மூலம் பயனடைந்திருக்கின்றனர்” என்றார் சுந்தரம் ஃபைனான்ஸ் சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளையின் சீனியர் கிளை மேலாளர் திரு. H. ரமேஷ் பாபு.
இந்தக் கிளை, நிதி ஆதரவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது என்ற குறிக்கோளையும் கடந்து, அதைவிட மேலானதாக வெளிப்படைத்தன்மை, கண்ணியம் மற்றும் மனிதாபிமான அணுகுமுறைக்காக வாடிக்கையாளர்களின் அசையா நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் கட்டமைக்கவும், நம்பிக்கையுடன் வாழவும் சுந்தரம் ஃபைனான்ஸ்-ன் இக்கிளை உதவியுள்ளது.
சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளையின் பலம் அதன் பணியாளர்களிடம்தான் உள்ளது. பல பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தின் (கரியர்) குறிப்பிடத்தக்க பகுதிகளை இங்கு செலவிட்டுள்ளனர்; திறமையுடன் மட்டுமல்லாமல், நேர்மை, புரிந்துணர்வு மற்றும் குறிக்கோளுடனும், அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கியிருக்கின்றனர். வாடிக்கையாளர்களுடனான அவர்களின் பிணைப்பு வெறும் நிதி பரிவர்த்தனைகளுக்கும் அப்பாற்பட்டது; பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியின் மீது கட்டமைக்கப்பட்ட நல்லுறவாக அது இருக்கிறது.
இந்த மைல்கல் நிகழ்வானது, ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் அமைதியாக துணைநின்ற பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கௌரவிக்கிறது. இந்த நீண்ட பயணத்தை சாத்தியமாக்குவதில் அவர்களின் பங்கை அங்கீகரிக்கும் விதமாக, திரு. ராஜேஷ் வெங்கட் அவர்களால் தனிப்பட்ட முறையில் கையொப்பமிடப்பட்ட மனமார்ந்த பாராட்டுக் கடிதங்கள், பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.
சுந்தரம் ஃபைனான்ஸ் 2029-ல் தனது 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகி வரும் வேளையில், இந்த கிளையின் வெள்ளிவிழா நிகழ்வானது, நிறுவனத்தின் ஸ்தாபக தத்துவத்தை, அதாவது நேர்மையுடன் சேவை, பணிவுடன் வளர்ச்சி மற்றும் சமூக நலனில் அக்கறை ஆகிய பண்பியல்புகளை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைகிறது.
சென்னை வைட்ஸ் ரோடு கமர்ஷியல் கிளை என்பது வெறும் பணியாற்றும் அமைவிடம் அல்லது ஒரு நிதி நிறுவனம் என்பதுமட்டுமல்ல; அது தொடர்ச்சியான சேவை, நற்பண்பு மற்றும் சரியானதைச் செய்வதற்கான அர்ப்பணிப்பின் ஒரு அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது.
சிறப்பான சேவையில் 25 ஆண்டுகள் நிறைவுவெள்ளிவிழாவைக் கொண்டாடும் சுந்தரம் ஃபைனான்ஸ்


More Stories
Linde Foundation Supports Treatment of Three-Year-Old Battling Rare Leukemia and Life-Threatening Complications
MRF Indian National Racing Challenge 2W Round 2 – Day 3
FICCI roadshow showcases Chhattisgarh to outside world