September 13, 2026

கே.கே. நகர், மீனாட்சி பொறியியல் கல்லூரியின் 20 மற்றும் 21-வது பட்டமளிப்பு விழா

CHENNAI: சென்னை, கே.கே. நகர், மீனாட்சி பொறியியல் கல்லூரியின் 20 மற்றும் 21-வது பட்டமளிப்பு விழா 12 செப்டம்பர் 2026 அன்று திறந்தவெளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தலைமை ஆலோசகரும், DMRL, DRDO முன்னாள் சிறந்த விஞ்ஞானியும் இயக்குநருமான டாக்டர் ஜி. மதுசூதன் ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.அவர் 863 பட்டதாரி மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கி, சிறப்பு, புதுமை, நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.இவ்விழாவிற்கு கல்லூரித் தலைவர் டாக்டர் ஜி. ஆர். கோகுல் தலைமை தாங்கினார்; செயல் இயக்குநர் டாக்டர் என். ரெங்கராஜன், முதல்வர் டாக்டர் ஐ. மஞ்சு, பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.

About Author