May 3, 2025

கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினவிழா

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினம் மற்றும்- மூத்த அரசியல்வாதிஅய்யா நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிற்பட்டோர் நலத்துறை ஆணையர் ஆணையர் சீ. சுரேஷ்குமார் ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மேலும் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் அய்யா பழ நெடுமாறன், முன்னாள் காவல்துறை தலைவர் கோ. சொக்கலிங்கம், சென்னை மாவட்டம்- கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் எம்.மோனி, சென்னை வெற்றிவேல் சரவணா சிட் பண்டு உரிமையாளர் மு. வெள்ளபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர்மற்றும் கோயம்பேடு அங்காடி தலைமை நிர்வாக அதிகாரி. திருமதி எம். இந்துமதி, வில்லிவாக்கம் சரகம் காவல் உதவி ஆணையாளர் டி ஆர் சிதம்பரம் முருகேசன், கோயம்பேடு சரகம் காவல் உதவி ஆணையாளர் ஆர். சரவணன், உட்பட காவல்துறை அதிகாரிகள் தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரி கலந்து கொண்டு மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர் மேலும் தொடர்ந்து பேசி அவர்கள் தொழிலாளர் வர்க்கம் இல்லையெனில் எந்த ஒரு நாடும் எந்தத் துறையும் வளர்ச்சி அடையாது உழைப்பாளர்கள் மட்டுமே வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் மே தினம் என்பது உறுதி செய்வதற்காக நடைபெற்ற போராட்டத்தின் வெற்றி நாள். இன்று உலக அளவில் மே தின விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்தியாவில் முதல் முதலில் தமிழகத்தை சேர்ந்த சிங்காரவேலர் அவர்கள் தான் மே தின விழாவை கொண்டாடினார். என்பது நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் எனவே இந்த நாளில் உழைப்பாளர்களுக்கும் உழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்தவர்களுக்கும் நாம் என்றும் அந்த வழியில் செயல்பட வேண்டும் என தெரிவித்தனர். மேலும்
மே தினத்தை முன்னிட்டு 2000 தொழிலாளர்களுக்கு மதிய உணவு 1000 துப்புரவு தொழிலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது, மேலும் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது

மேலும் இந்த நிகழ்ச்சியில்

கூட்டமைப்பு தலைவர் எஸ் கே எம் செந்தில், செயலாளர் டி மணிவண்ணன் , பொருளாளர் டி குமரேசன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டி எம் எஸ் பரமசிவம், பண்ணை பாலாஜி குமார், எம்.முத்து கணேசன், பொருளாளர் டி. உத்தரவேல் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

About Author