தமிழ்நாடு பிராமணர் சங்கம் பருத்திப்பட்டு கிளை (திருவள்ளூர் மாவட்டம் )சார்பில் திருவிளக்கு பூஜை பருத்திப்பட்டு நரசிம்மன் அவர்கள் தலைமையில் பருத்திப்பட்டு அக்ரஹாரம் ஸ்ரீ பெருந்தேவி நாயிகா ஸமேத ஸ்ரீ வெங்கடவரத பெருமாள் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த மாபெரும் திருவிளக்கு பூஜையில் ராமநாத ஐயர் முன்னிலை வகுத்தார் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பினை ஸ்ரீமதி ஸ்ரீவித்யா ஜெகன்நாதன் ஸ்ரீமதி சாரநாயகி சிவராமன் ஸ்ரீமதி பத்மினி ஸ்ரீராமன் ஸ்ரீமதி சுபாஷினி முத்துக்கிருஷ்ணன் ஸ்ரீமதி வேதவல்லி பார்த்தசாரதி ஸ்ரீமதி வசந்தி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த திருவிளக்கு பூஜையினை ஒருங்கிணைத்து மிக சிறப்பான முறையில் வழிநடத்தினர்.
மேலும் இந்த திருவிளக்கு பூஜையில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநில பொருளாளர் ஆர் நரசிம்மன் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஸ்ரீமதி டி ராதா தமிழ்நாடு பிராமண சங்கத்தின் திருமுல்லைவாயில் கிளை தலைவர் ஸ்ரீமதி உஷா பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த ஸ்ரீ வித்யா ஜெகன்நாதன் சாரநாயகி சிவராமன் உஷா பத்மநாபன் ஆகியோர் கூறியது திருவிளக்கு பூஜியினால் அனைவருக்கும் சகல நன்மைகள் உண்டாகும் குடும்பத்தில் செல்வம் செழிக்கும் யாருமே இல்லாத இல்லத்தில் விளக்கு ஏற்றினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும் யாருக்கும் இல்லை என்ற நிலைமை மாறி அனைத்து சௌபாக்கியமும் உண்டாகும் இந்த மாபெரும் விளக்கு பூஜையில் சுமார் 250 நபர்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் விளக்கு பூஜையில் அனைவருக்கும் அனைத்து நன்மைகளும் பெருகும் எல்லா வளங்களையும் எல்லா நன்மைகளையும் எம்பெருமான் நமக்கு வழங்குவார் இன்னும் பல நன்மைகள் உண்டாகும் அதேபோல் அடுத்தாண்டு இன்னும் மிக சிறப்பான முறையில் ஆயிரம் நபர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இந்த திருவிளக்கு பூஜை அமையும் அதற்கு எம்பெருமான் துணை நிற்பார் மேலும் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் திருவிளக்கு பூஜையின் மூலம் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் பெருக வேண்டுமென வாழ்த்தி மகிழ்கிறோம் என தெரிவித்தனர். இந்த மாபெரும் திருவிளக்கு பூஜையில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது மேலும் இந்த சிறப்பான திருவிளக்கு பூஜையினை ஏற்பாடு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் பருத்திப்பட்டு கிளை சார்பில் நன்றியினை தெரிவித்தனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai