சென்னை, 2025: முருகப்பா குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவான சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (சோழா), தமிழ்நாடெங்கும் உள்ள நலிவடைந்த சமூகங்களை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான AID இந்தியாவுடன் இணைந்து “யுரேகா ஹோம்ஸ்” என்ற முன்முயற்சியைச் செயல்படுத்தியுள்ளது.
சோழாவின் தலைமை மனிதவள அதிகாரி திரு. ஜீவா பாலகிருஷ்ணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த முன்முயற்சி, இருளர் சமூகத்திற்கு ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளது.
பாரம்பரியமாகப் பாம்பு பிடித்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்தச் சமூகம், தற்போது புதிய மற்றும் பல்வேறு வாழ்வாதாரங்களுக்கு மாறி வருகிறது. இன்று, அவர்களில் பலர் எம்ப்ராய்டரி, மீன்பிடித்தல் மற்றும் தினசரி கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சமூகம், குறிப்பாக மழை மற்றும் கோடை வெப்பத்தின் போது, போதுமான வீட்டு வசதி இல்லாததால் நீண்ட காலமாகப் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. தமிழ்நாடு அரசு நிலப் பட்டாக்களை வழங்கியிருந்தாலும், போதிய வசதிகள் இல்லாததால் பல குடும்பங்கள் பாதுகாப்பற்ற மற்றும் சிதிலமடைந்த குடிசைகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. இந்த சிக்கலுக்குத் தீர்வுகாணும் வகையில், “யுரேகா ஹோம்ஸ்” திட்டத்தின் கீழ் வெப்பத் தடுப்பு, மழைப் பாதுகாப்பு மற்றும் மின்சாரத்திற்கான சோலார் பேனல்கள் போன்ற வசதிகளுடன் கூடிய, காலநிலை மாற்றங்களைத் தாங்கும் உறுதியான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) ஆதரவின் மூலம், இத்தகைய குடும்பங்கள் தற்காலிகக் குடிசைகளிலிருந்து வெளியேறி, வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையைப் பெற சோழா உதவுகிறது.
மிகவும் தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுப்பதில் உள்ளூர் சமூகத்தின் தீவிரப் பங்களிப்புடன், இத்திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் திருவள்ளூர் மாவட்டம், குருபுரம் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள 14 இருளர் குடும்பங்களுக்கு 14 புதிய வீடுகள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த முன்முயற்சி குறித்து சோழாவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. ரவீந்திர குமார் குண்டு கூறுகையில், “சோழாவில், ஒவ்வொரு குடும்பமும் ஒரு பாதுகாப்பான வீட்டிற்குத் தகுதியானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ‘யுரேகா ஹோம்ஸ்’ திட்டத்திற்கான எங்கள் ஆதரவு, அர்த்தமுள்ள தலையீடுகள் மூலம் சமூகங்களை மேம்படுத்துவதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறோம். பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான தங்குமிடத்தை வழங்குவதன் மூலம், இருளர் குடும்பங்கள் புதிய தன்னம்பிக்கையுடனும், சிறந்த எதிர்காலத்திற்கான கனவுகளுடனும் முன்னோக்கிச் செல்ல வழிவகுப்போம் என நம்புகிறோம்” என்றார்.
சோழாவின் சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு, நிதி மேம்பாட்டிற்கு அப்பாற்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகங்களிடையே பாதுகாப்பான வீட்டு வசதியின் அவசரத் தேவையை உணர்ந்து, முழுமையான சமூக மேம்பாட்டை நோக்கியதாக விரிவடைகிறது. “யுரேகா ஹோம்ஸ்” திட்டத்திற்கான ஆதரவின் மூலம், திருவள்ளூரில் உள்ள இருளர் குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு சோழா நிறுவனம் நிதி மற்றும் செயல்பாட்டு உதவிகளை உறுதியளித்துள்ளது. இது அவர்களைப் பாதுகாப்பற்ற, தற்காலிகக் குடிசைகளிலிருந்து கண்ணியத்தையும் நீண்டகால நல்வாழ்வையும் அளிக்கும் பாதுகாப்பான, நீடித்த வீடுகளுக்குக் குடிபெயர வழிவகுக்கிறது.
சமூக நலனுக்காகத் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதிலும், சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு வளர்ச்சியையும் வளர்ப்பதிலும் சோழமண்டலம் அர்ப்பணிப்புடன் உள்ளது. “யுரேகா ஹோம்ஸ்” போன்ற முன்முயற்சிகள் மூலம், நலிவடைந்த சமூகங்களை நேரடியாக மேம்படுத்தி, அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கும் திட்டங்களுக்கு நிறுவனம் தொடர்ந்து ஆதரவளிக்கிறது. இந்த ஒத்துழைப்பு, தேவைப்படுபவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நீண்டகால முன்னேற்றத்தை செயல்படுத்துவதற்கும் சோழா நிறுவனம் கொண்டிருக்கும் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் பற்றிய அறிமுகம்
சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (சோழா), 1978-ல் முருகப்பா குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவாகத் தொடங்கப்பட்டது. உபகரணங்களுக்கு நிதியளிக்கும் நிறுவனமாகத் தனது வணிகத்தைத் தொடங்கிய சோழா, இன்று வாகனக் கடன், வீட்டுக் கடன், சொத்து மீதான கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் கடன், நுகர்வோர் சாதனக் கடன், தங்கக் கடன், பாதுகாப்பான வணிகம் மற்றும் தனிநபர் கடன்கள், நுகர்வோர் மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன்கள், முதலீட்டு ஆலோசனை சேவைகள், பங்குச் சந்தை தரகு மற்றும் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கும் ஒரு விரிவான நிதிச் சேவை வழங்குநராக உருவெடுத்துள்ளது.
சோழா, இந்தியா முழுவதும் 2481 கிளைகளிலிருந்து செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ. 2,07,663 கோடிக்கும் அதிகமாகும்.
வாடிக்கையாளர்களை ஒரு சிறந்த வாழ்க்கைக்குள் நுழைய வைப்பதே சோழாவின் நோக்கம். நாடு முழுவதும் 43 லட்சத்திற்கும் அதிகமான மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களை சோழா கொண்டுள்ளது. நிறுவனம் தனது தொடக்கம் மற்றும் வளர்ச்சி முழுவதும், அதன் மதிப்புகளில் தெளிவான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த மதிப்புகளின் அடிப்படைக் கொள்கை, நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதும், அதன் பெருநிறுவன வரம்பிற்குள் இருக்கும் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகம் ஆகிய அனைவருக்கும் பொறுப்பாக இருப்பதும் ஆகும்.
மேலும் விவரங்களுக்கு,
மேலும் விவரங்களுக்கு, www.cholamandalam.com என்றஇணையதளத்தைப் பார்வையிடவும்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai